பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

doctype

152

document source


சாதனங்கள் கைக்கு அடக்கமாக மிகச்சிறியதாகவே இருக்கும்.வீட்டில்/ அலுவலகத்தில் இருக்கும்போது,மடிக்கணினியை ஒரு மேசைக் கணினியைப் போலப் பயன்படுத்த விரும்பலாம்.ஆனால் அதற்கு மேசைக் கணினியின் காட்சித் திரை,விசைப்பலகை,சுட்டி மற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி வேண்டும்.இவ் வசதிகளைக் கொண்டதுதான் பொருத்து நிலையம். இக்கருவியில் ஒரு மடிக்கணினி,காட்சித் திரை,விசைப்பலகை,அச்சுப்பொறி,சுட்டி ஆகியவற்றைப் பொருத்திக்கொள்ள வசதி இருக்கும்.

doctype:ஆவணவகை;ஆவண இனம்:எஸ்ஜிஎம்எல்(SGML)ஆவணத்தின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அறிவிப்பு.ஒவ்வொரு எஸ்ஜிஎம்எல் ஆவணத்திலும் ஆவண வகையின் வரையறை(Document Type Difinition) குறிப்பிடப்பட வேண்டும்.

documentation and versioning:ஆவணமாக்கமும் பதிப்பாக்கமும்.

document centric:ஆவண மையமானது: இது ஒர் இயக்க முறை மையின் பண்புக்கூறு ஆகும்.முன்பிருந்த இயக்க முறைமைகள் நிரலை மையமாகக் கொண்டவை.அதாவது,ஒர் ஆவணத்தைத் திறக்குமுன் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்பைத் திறக்க வேண்டும். பிறகு அதனுள்ளேதான் ஆவணத்தைத் திறக்க வேண்டும்.ஆனால் இப்போதுள்ள மெக்கின்டோஷ்,விண்டோஸ் இயக்க முறைமைகளில் ஒர் ஆவணத்தைத் திறப்பதற்குக் கட்டளை தந்தால் போதும்.அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாடு தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே ஆவணம் திறக்கப்படும்.எடுத்துக்காட்டாக,விண்டோஸ் இயக்கமுறைமையில் எம்எஸ்வேர்டு தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர் ஆவணத்தை சுட்டியால் இரட்டை கிளிக் செய்து திறந்தால்,வேர்டு தொகுப்பு,தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே வேர்டு ஆவணம் திறக்கப்படும்.ஒர் ஆவணம் எந்தத் தொகுப்பில் உருவாக்கப்பட்டது என்பதை அறியாமலே அந்த ஆவணத்தைப் பயனாளர் திறக்க முடியும்.

document close button:ஆவண மூடு பொத்தான்.

document distribution:ஆவணப் பகிர்மானம்.

document image processing:ஆவணப் படிமச்செயலாக்கம்.

document interchange architecture(DIA):ஆவணமாறுகொள்கட்டமைப்பு.

document management:ஆவண மேலாண்மை:ஒர் நிறுவனத்துக்குள் கணினிவழியாகப் பரிமாறிக் கொள்ளப்படும் மின்னணு ஆவணங்களை உருவாக்குதல்,வினியோகித்தல் போன்ற பணிகளுக்கான கோப்பு மேலாண்மை அமைப்பு.

document minimise button:ஆவணச் சிறிதாக்கு பொத்தான்.

document source:ஆவண மூலம்:வையவிரிவலையில்(www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில்

உருவாக்கபபட்டவை.அவை சாதாரண உரைக்கோப்புகள் ஆகும்.<HTML>,</HTML>, , , ,TR>என்பது போன்ற குறிசொற்களுடன்(Tags) உருவாக்கப்படுகின்றன.