பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

double linked list

155

downtime


கள் தகவலைப் பதிய,திருத்தப்பட்ட அலைவரிசைப் பண்பேற்றக் குறி யீட்டுமுறை பயன்படுத்தப்பட்டது.

double linked list:இருமுனைத் தொடுப்புப் பட்டியல்.

double precision arithmetic:இரட்டைச் சரிநுட்பக் கணக்கீடு:இரட்டைத் துல்லியக் கணக்கீடு.

double sided:இருபுற.

double striking:இரட்டை அச்சடிப்பு.

dot file:புள்ளிக் கோப்பு:யூனிக்ஸ் இயக்க முறைமையில் புள்ளியில் தொடங்கும் பெயரைக் கொண்ட கோப்பு.(எ-டு)profile ஒரு கோப் பகத்திலுள்ள கோப்புகளின் பட்டியலைத் திரையிடும்போது,புள்ளிக் கோப்புகள் இடம்பெறா.பெரும் பாலும் ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கான நிரல்களின் நிலைபாடுகளை இருத்தி வைக்கப் பயன்படுகின்றன.

double dereference:இரட்டை சுட்டுவிலக்கம்:p என்பது a என்னும் மாறியின் முகவரியைக்குறிக்கும் சுட்டு(Pointer)எனில், *p என்பது a-யில் இருத்தி வைக்கப்பட்ட மதிப்பினை நேரடியாகச் சுட்டும்.இதில் * என்னும் அடையாளம் சுட்டு விலக்கக் குறியீடாகப் பயன்படுகிறது.q என்பது p-யைச் சுட்டும் சுட்டு எனில்.*q என்பது p-யின் மதிப்பைச்(அதாவது அதில் இருத்தி வைக்கப்பட்டுள்ள a-யின் முகவரியை)சுட்டும்.**q என்பது a-யின் மதிப்பை நேரயாகச் சுட்டும்.இதனை இரட்டைச் சுட்டுவிலக்கம் என்கிறோம்.

down arrow:கீழ்நோக்கு அம்புக்குறி.

downloadable font:பதிவிறக்கத்தகு எழுத்துரு:ஒர் ஆவணத்தை அச் சிடும்போது, அந்த ஆவணத்தின் தகவல்,அச்சுப்பொறியின் நினைவகத்தில் ஏற்றப்படும்.அச்சுக்குரிய எழுத்துருவும் கணினியின் நிலைவட்டிலிருந்து அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும்.பதிவிறக்கத் தகு எழுத்துருக்கள் மிகப் பரவலாக லேசர் அச்சுப்பொறிகளிலும் பக்க அச்சுப்பொறிகளிலும் பயன்படுத் தப்படுகின்றன.சில புள்ளியணி அச்சுப்பொறிகளும் இத்தகைய எழுத்துருக்களை ஏற்கின்றன.

downsizing:சிறிதாக்கம்:ஒரு நிறுவனத்தில் கணினிச் செயல்பாடுகள் முழுவதையும் பெருமுகக் கணிணி(mainframe)சிறு கணிணி(mini),போன்ற பெரிய கணினி அமைப்பிலிருந்து குறுங்கணினி அல்லது நுண்கணினி (micro)அமைப்புக்கு மாற்றியமைத்தல்.பெரும்பாலும் இம்மாற்றம் செலவைக் குறைக்க,அல்லது புதிய மென்பொருளுக்கு மாறுவதற்காக இருக்கலாம். சிறிய கணினி அமைப்பு என்பது பீசிக்கள்,பணி நிலையங்கள் இணைந்த கிளையன்(client)வழங்கன்(server)அமைப்பாக இருக்கலாம்.ஒன்று அல்லது சில குறும்பரப்பு/விரிபரப்புப் பிணையங்கள் இணைக்கப்பட்ட பெருமுகக் கணினியாகவும் இருக்கலாம்.

downstream:கீழ் தாரை; கீழ் ஒழுக்கு:கீழ்பாய்வு: ஒரு செய்திக் குழுவுக்கான செய்தி,ஒரு செய்தி வழங்கனிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்பி வைக்கப்படும் திசை வழியைக் குறிக்கிறது.

downtime:முடக்க நேரம்;செயல் படா நேரம்:ஒரு கணினி அமைப்பு அல்லது அதனோடு தொடர்புடைய வன்பொருள்,செயல்படாமல் இருக்கும் நேரம்/நேரத்தின் விழுக்