பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

drum

158

DUA


drum : உருளை : 1. தொடக்க காலப் பெருமுகக் கணினிகளில் தகவல்களைச் சேமித்து வைக்கும் காந்த ஊடகமாகப் பயன்பட்டது. 2. சில அச்சுப்பொறிகளிலும், வரைவு பொறிகளிலும் (Plotter) பயன்படுத்தப்படும் சுழலும் உருளை. 3. லேசர் அச்சுப் பொறியில் ஒளிமின் பொருள் பூசப்பட்ட சுழலும் உருளை பயன்படுகிறது. லேசர் கதிர்கள் ஒளிமின் பூச்சின்மீது தாக்கும்போது, அந்த இடம் மின்னூட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. உருளையின்மீது மின்னூட்டம் பெற்ற பகுதிகள், மைப்பொடித் துகள்களை ஈர்க்கின்றன. பின் உட்செலுத்தப்படும் தாளின்மீது அத்துகள்கள் படிய வைக்கப்படுகின்றன.

drum, magnetic : காந்த உருளை.

drum scanner: உருளை வருடுபொறி : வருடுபொறிகளில் ஒரு வகை. வருடப்படவேண்டிய அச்சடித்த தாள் உருளையின்மீது சுற்றப்பட்டுத் தகவல் கணினிக்கு அனுப்பப்படுகின்றது.

drum storage: உருளைச் சேமிப்பகம்.

.drv : .டி.ஆர்வி : இயக்கிக் கோப்புகளின் வகைப்பெயர்.

dry running : உலர் ஓட்டம்; ; வெள்ளோட்டம்.

DSA : டிஎஸ்ஏ : கோப்பக முறைமை முகவர் அல்லது கோப்பக வழங்கன் முகவர் என்று பொருள்படும் Directory System Agent/Directory Server Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ்.500 வழங்கன்களில் பயன்படுத்தப்படும் ஒருநிரல். டியூஏ (DUA. Directry User Agent) என்னும் கிளையன் நிரல் அனுப்பும் கோரிக்கையின் அடிப்படையில் பிணையத்தில் ஒரு பயனாளரின் முகவரியைத் தேடித் தரும் நிரல்.

DSR : டிஎஸ்ஆர் : தகவல் தொகுதி தயார் என்று பொருள்படும் Data Set Ready என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். தொடர் வரிசைத் தகவல் தொடர்பில் அனுப்பப்படும் ஒரு சமிக்கை. ஓர் இணக்கி அது இணைக்கப்பட்டுள்ள கணினிக்கு தான் பணியாற்றத் தயாராக இருக்கும் நிலையைத் தெரிவிக்கும் சமிக்கை. ஆர்எஸ்-232-சி இணைப்புகளில் தடம் 6-ல் அனுப்பப்படும் வன்பொருள் சமிக்கை.

DTE : டிடீஇ : தகவல் முனையக் கருவி என்று பொருள்படும் Data Terminal Equipment என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232-சி வன்பொருள் தரவரையறையில், ஒரு வடத்தில் அல்லது ஒரு தகவல் தொடர்புத் தடத்தில், தகவலை இலக்கமுறை வடிவில் அனுப்பத் திறன்வாய்ந்த நுண்கணினி அல்லது முனையம் போன்ற ஒரு சாதனத்தைக் குறிக்கிறது.

DTV : டிடீவி : மேசைக் கணினி ஒளிக்காட்சி என்று பொருள்படும் DeskTop Video என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத்தில் நிகழ்படக் கலந்துரையாடலுக்காக ஒளிப்படக் கருவியின் பயன்பாட்டைக் குறிக்கிறது.

DUA : டியூஏ : கோப்பகப் பயனாளர் முகவர் என்று பொருள்படும் Directory User Agent என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஓர் எக்ஸ்.500 கிளையன்நிரல். இது, பிணையத்திலுள்ள ஒரு பயனாளரின் முகவரியைத் தேடித்