பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dual disk drive

159

duplex printer


தருமாறு டிஎஸ்ஏ-வுக்குக் கோரிக்கை அனுப்பும்.

dual disk drive:இரட்டை வட்டு இயக்ககம்:ஒரு கணினியிலுள்ள இரண்டு நெகிழ்வட்டு இயக்ககங்களைக் குறிக்கிறது.

dual processor:இரட்டைச் செயலி;இரட்டைச் செய்முறைப்படுத்தி.

dual scan display:இரட்டை வருடு திரைக்காட்சி:மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் எல்சிடி(LCD-Liquid Crystal Display)காட்சித்திரையின் தொழில்நுட்பம்.இயங்கா அணி(Passive Matrix)அடிப்படையிலான நுட்பம் இது.திரையின் புதுப்பித்தல் விகிதம் மற்ற காட்சித்திரைகளைவிட இருமடங்கு வேகம் ஆகும்.இயங்கு அணி(Active Matrix)அடிப்படையிலான தொழில் நுட்பத்தோடு ஒப்பிடுகையில்,இரட்டை வருடு திரைக்காட்சி மிகவும் சிக்கனமானது;குறைந்த அளவு மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்.ஆனால் அதே வேளையில்,தெளிவு குறைவாகவும், குறைந்த பார்வைக் கோணமும் கொண்டதாக இருக்கும்.

dumb quotes:ஊமை மேற்கோள்; மருங்கல் மேற்கோள்: ஒரு சொல் அல்லது தொடரின் தொடக்கத்தில் இருக்கும் மேற்கோள் குறியும், இறுதியில் இருக்கும் மேற்கோள் குறியும் ஒன்று போலத் தோற்றமளித்தல் (தட்டச்சுப் பொறியில் இருப்பதுபோல).கணினி விசைப்பலகையிலும் ஒற்றை மேற்கோள் குறியும்,இரட்டை மேற்கோள் குறியும் ஒரு பக்கக் குறியாகவே இருக்கும்.அவற்றை ' ' " "என்பது போல இருபக்கக் குறிகளாக மாற்றுவதற்கு எம்எஸ்வேர்டு போன்ற மென்பொருள் தொகுப்புகளில் வசதி உண்டு.இருபக்கக் குறிகளை துடிப்பான மேற்கோள்(Smart quotes)என்பர்.

dump,automatic hardware:தானியங்கு வன்பொருள் திணிப்பு.

duplex channel:இருதிசைத் தடம்: இருதிசையிலும் தகவலை அனுப்பப்/பெற வசதியுள்ள தகவல் தொடர்பு இணைப்பு.

dummy routine:வெற்றுத் துனை நிரல்;வெற்று வாலாயம்:இந்தத் துணைநிரல் எப்பணியையும் செய்யாது. ஆனால் ஒரு துணை நிரலுக்குரிய சொல்தொடர் அமைப்புகளைப் பெற்றிருக்கும்.செயல் பாட்டுப் பகுதிமட்டும் வெற்றாக இருக்கும். Private Sub Command -Click End Sub என்பது விசுவில் பேசிக்கில் ஒரு வெற்றுத் துணைநிரல்.பின்னாளில் வெற்றுத் துணைநிரலில் கட்டளை வரிகளைச் சேர்த்து அதனைப் பயனுள்ள துணைநிரலாய் மாற்றிக் கொள்ளலாம்.மேலிருந்து கீழ்(Top-Down)நிரலாக்க முறையில் இது போன்ற வெற்றுத் துணைநிரல்களை உருவாக்கி வைத்துக்கொண்டு,நிரலாக்கம் வளர்ச்சிபெறும் கட்டத்தில் அவற்றைப் பயனுள்ள துணைநிரல்களாய் மாற்றியமைப்பர்.

duplex printer:இருதிசை அச்சுப்பொறி:பொதுவாக, அச்சுப்பொறி களில் அச்சு முனை(print head)ஒரு திசையில் மட்டுமே அச்சிடும்.இடப் புறமிருந்து வலப்புறம் அச்சிட்டுச் செல்லும்.பிறகு அச்சுமுனை அச்சிடாமல் இடப்பக்கம் திரும்பி வரும்.பிறகு முன்போல வலப்பக்கம்வரை அச்சிட்டுச் செல்லும்.