பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DVD

160

dynamic caching


சில அச்சுப் பொறிகளில் இருதிசைகளிலும் அச்சிடும்படி அமைத்திருப்பர்.

DVD : டிவிடி : Digital Versatile Disc/ Digital Video Disc என்பவற்றின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

DVI OR DV-1: டிவிஐ/டிவி-ஐ: இலக்க முறை ஒளிக்காட்சி இடைமுகம் என்று பொருள்படும் (Digital Video Interface) என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் நிலைவட்டில் அல்லது குறுவட்டில் ஒளிக்காட்சி, கேட்பொலி, வரைகலை மற்றும் பிற தகவல்களைப் பதிவு செய்வதற்குரிய வன்பொருள் அடிப்படையிலான இறுக்கும்/விரிக்கும் தொழில் நுட்பம். 1987ஆம் ஆண்டு ஆர்சிஏ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1988இல் இன்டெல் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அதன்பிறகு இன்டெல் டிவிஐ-யின் மென் பொருள் பதிப்பை இன்டியோ(Indeo) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

Dynaload drivers : நிகழ்நேர இயக்கிகள்: ஐபிஎம் பீசி டாஸ் 7 இயக்க முறைமையில் Dynaload என்ற கட்டளை உண்டு. டாஸ் சின்னத்தில் இக்கட்டளையைத் தந்து, சில சாதன இயக்கிகளை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ள முடியும். பொதுவாக, சாதன இயக்கிகள் config.sys என்னும் தானியங்கிக் கட்டளைக்கோப்பு மூலமாகவே நினைவகத்தில் ஏற்றப்படுகின்றன. கணினி இயக்கப்படும்போதே இது நிகழ்ந்துவிடும். புதிதாக சாதன இயக்கி எதனையும் ஏற்ற வேண்டுமெனில் config.sys கோப்பில் திருத்தம் செய்து மீண்டும் கணினியை இயக்க வேண்டும். ஆனால், Dynaload மூலம் config.sys கோப்பினைத் திருத்தாமலே சாதன இயக்கியை நினைவகத்தில் ஏற்ற முடியும்.

dynamic address translation : இயங்கு நிலை முகவரி மாற்றம்.

dynamic allocation : இயங்குநிலை ஒதுக்கீடு; நிகழ்நேர ஒதுக்கீடு : ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும் போதே தேவைக்கேற்ப நினைவகத்தில் இடம் ஒதுக்கீடு செய்தல். அவ்வாறு ஒதுக்கப்பட்ட நினைவகத்தை, நிகழ்நேரத்திலேயே விடுவிக்கவும் முடியும். இதனால் நிகழ் நேரத்தில் தேவையான தரவுக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கையாண்டு பின் விடுவிக்க முடிகிறது. பாஸ்கல், சி, சி++ போன்ற மொழிகளில் இதற்கான வழிமுறைகள் உள்ளன.

dynamic caching : இயங்குநிலை இடைமாற்று: நிகழ்நேர இடைமாற்று : அடிக்கடி கையாளவேண்டிய தகவல்களை உடனடியாக எடுத்தாள வசதியாக, முதன்மை நிவைகத்திலுள்ள தகவல்களை நுண்செயலிதனக்கருகில் ஓர் இடைமாற்று நினைவகத்தில் (cache memory) வைத்துக் கொள்ளும். இதனால் கணினியின் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கும். மிக அண்மையில் பயன்படுத்திய தகவலை இடைமாற்று நினைவகத்தில் வைத்துக் கொள்ளல் நிகழ்நேர இடைமாற்று எனப்படுகிறது. இடை மாற்று நினைவகத்தின் கொள்திறன் அடிப்படையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு எவ்வளவு நினைவகப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இல்லாமல், எவ்வளவு