பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

effects

164

electronics commerce


அனுமதிக்கிறது.இஇஎம்எஸ்ஸின் சிறப்புக்கூறுகள் இஎம்எஸ் பதிப்பு 4.0-வில் சேர்க்கப்பட்டுள்ளன.

effects:விளைவு.

efficient:செயல்திறன்மிக்க செயலாற்றல் நிறைந்த,

e-form:மின்படிவம்:மின்னணுப் படிவம் என்பதன் சுருக்கம்.ஒரு கணினிப் பிணையத்தில் இருக்கின்ற ஒரு வெற்றுப் படிவம்.பயனாளர் ஒருவர் தேவையான விவரங்களை அப்படிவத்தில் நிறைவுசெய்து,உரிய நிறுவனத்துக்கு அப்பிணையம் வழியாகவே அனுப்பிவைக்க முடியும்.இணைய நிறுவனங்கள் பலவும் தத்தமது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறவேண்டிய விவரங்களை இதுபோன்ற படிவங்கள் மூலம் பெறுகின்றன.இணையத்தில் பயன்படுத்தப்படும் மின்படிவங்கள் பெரும்பாலும் சிஜிஐ என்னும் உரைநிரல் மொழியில் உருவாக்கப் படுகின்றன. மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

eg:இஜி: இணையதள முகவரி எகிப்து நாட்டைச் சேர்ந்ததுஎன்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர்.

e-government:இணைய அரசு;

electrically operated computer: மின்னியக்கக் கணினி.

e-health care:மின் உடல்நலப் பாதுகாப்பு:இணைய நலப்பாதுகாப்பு.

electroluminescent display:மின்ஒளிர்வு திரைக்காட்சி: மடிக் கணினிகளில் பயன்படுத்தப்படும் தட்டை வடிவத் திரைக்காட்சியில் ஒருவகை.செங்குத்து மற்றும் கிடைமட்ட மின்வாய்களுக்கு (electrodes) இடையே ஒரு பாஸ்பர் அடுக்கு அமைக்கப் பட்டிருக்கும்.மின்வாய்கள் எக்ஸ்-ஒய் ஆய அச்சுகளாகச் செயல்படுகின்றன.இரண்டு மின்வாய்களும் மின்னூட்டம் பெறும்போது, அவற்றின் குறுக்குவெட்டுப் புள்ளியில் அமைந்த பாஸ்பரஸ் ஒளியை உமிழும்.மின்ஒளிர்வுத் திரைக் காட்சி ஏனைய காட்சித் திரை களைவிட விரிவான பார்வைக் கோணத்தையும் தருகின்றன.தற்போது இத்தகைய காட்சித் திரை களுக்குப்பதில் இயங்கணி (active matrix) எல்சிடி திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

electrolysis:மின்பகுமம்வேதிக் கூட்டுப் பொருளினூடே(Chemical Compound)மின்சாரத்தை செலுத்தி, மூலத் தனிப் பொருட்களாகப் பிரிக்கும் செயலாக்கம்.

electromagnetic disk:மின்காந்த வட்டு.

electro magnetic heads:மின்காந்த முனைகள்.

electron beam deflection system: மின்னணுக் கற்றை விலகல் அமைப்பு.

electronic blockboard:மின்னனு கரும்பலகை.

electronic book:மின்னணு நூல்.

electronic commerce:மின்னனு வணிகம் : கணினிப் பிணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை.மின்வணிகம், நிகழ்நிலை(Online) தகவல் சேவை,இணையம் அல்லது அறிக்கைப் பலகைச் சேவை (BBS) ஆகியவற்றின் வழியாக ஒரு பயனாளருக்கும் ஒரு வணிக நிறுவனத்துக்கும் இடையே