பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electronic content

165

electronic table


நடைபெறுவதாக இருக்கலாம்.ஒரு வணிக நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளருக்கும் இடையே,மின்னணு தகவல் பரிமாற்றத் (EDI) தடங்கள் வழியாக நடைபெறும் எவ்வித வணிகத் தகவல் பரிமாற்றமாகவும் இருக்கலாம்.

electronic content:மின்னவை உள்ளடக்கம்.

electronic credit:மின்னணுப் பற்று: இணையத்தின் வழியாக பற்று அட்டை பரிமாற்றங்கள் மூலம் நடைபெறும் மின்வணிக நடைமுறை.

electronic data change:மின்னணு தகவல் மாற்றி.

'electronic document:மின்னணு ஆவணம்.

electronic document distribution:மின்னணு ஆவணப் பகிர்மானம்.

electronic frontier foundation:மின்னணு எல்லை நிதிய நிறுவனம்:கணினிப் பயனாளர்களின் பொதுஉரிமைகளைப் பாதுகாப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட,பொது நல அமைப்பாகும்.அமெரிக்காவில் சூதாட்டக்காரர்களிடம் இரகசியப் போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தி வந்தனர். அதனை எதிர்கொள்ள 1990ஆம் ஆண்டு மிட்சேல் கபூர்,ஜான் பெர்ரி பார்லோ ஆகிய இருவரும் சேர்ந்து இந்த அமைப்பைத் தொடங்கினர்.

electronic mail address:மின்னணு அஞ்சல் முகவரி;மின்னஞ்சல் முகவரி.

electronic mail services:மின்னணு அஞ்சல் சேவைகள்: கணினிப் பயனாளர்கள், மேலாளர்கள்,இரண்டுக்கும் இடைப்பட்டோர் இம்மூவரும் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும்,பிரித்தனுப்பவும் அனுமதிக்கின்ற சேவைகளாகும்.

electronic mall:மின்னணு அங்காடி: கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் நிகழ்நிலை வணிகச் செயல்பாடுகளின் மெய்நிகர் தொகுப்பு(Virtual Collection).ஒன்றையொன்று சார்ந்த வணிகச் செயல்பாடுகள் ஒன்று இன்னொன்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓர் இணையதளத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும்.

electronic paper:மின்னணுத் தாள்: மின்னணுக் காகிதம்.

electronic records:மின்னணு ஏடுகள்.

electronic point of sale (EPOS): மின்னணு விற்பனை முனையம்.

electronic shopping:மின்னணுக் கடைச்செலவு.

electronic speech synthesis:மின்னணு பேச்சு ஒருங்கிணைவு.

electro sensitive paper:மின்னுணர்தாள்.

electro sensitive printer:மின்னுணர் அச்சுப்பொறி.

electronic signature authenticator software:மின்னணு கையெழுத்து சான்றுறுதி மென்பொருள்.

electronic storefront:மின்னணுக் கடைமுனை:இணையத்தில் ஒரு நிறுவனம் தன்னுடைய விற்பனைப் பொருட்களைக் கடைபரப்பி வைத்து,வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்கு அல்லது நிகழ்நிலை விற்பனைக்கு வழி செய்தல்.

electronic table:மின்னணு வரைபட்டிகை.