பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electronic text

166

elegant


electronic text:மின்னணு உரை.

electronic wand:மின்னணு ஒளிக்கோல்; மின்னணு மாத்திரைக் கோல்.

electron tube:மின்னணுக் குழாய்: மின்னணுச் சமிக்கைகளை அனுப்பவும்,திறன் பெருக்கவும் பயன்படும் ஒரு சாதனம்.உலோகத் தகடுகள் அல்லது வலைகள் போன்ற மின்னணு உறுப்புகள் உள்ளே பொருத்தப்பட்ட,உறையிடப்பட்ட கண்ணாடிக் குழாய்.இப்போதெல்லாம் பல்வேறு கருவிகளில் மின்னணுக் குழாய்களுக்குப் பதில் மின்மப் பெருக்கிகளே (Transistors) பயன்படுத்துகின்றனர்.என்றாலும்,எதிர்மின் கதிர்க் குழாய்(Cathode Ray Tubes),வானொலி அலைமின் சுற்றுகள் மற்றும் கேட்பொலிப் பெருக்கிகளில் குழாய்களைப் பயன்படுத்துகின்றனர்.

electrophotographic printers:மின் ஒளிப்பட அச்சுப்பொறிகள்:லேசர்,எல்இடி,எல்சிடி, அயனிப்படிவு அச்சுப் பொறிகளை இந்த வகையில் சேர்க்கலாம்.மின்னூட்டப்பட்ட ஒளி உணர்வுள்ள உருளைமீது எதிர்நிலைப் படிமம் ஒன்றைப் படிய வைப்பர்.அப்படத்திற்கு ஏற்ப,ஒளி உணர்வுள்ள உருளை நிலைமின்னூட்டத்தை அதன் மேற்பரப்பில் உருவாக்கும்.மைத்துகள்(Toner)அப்பரப்பில் ஒட்டிக் கொள்ளும்.உருளை,மைத்துகளை தாளின்மீது பரப்பும்.வெப்பமானது மைத்துகள்களை தாளோடு ஒட்டிக்கொள்ளச் செய்யும்.உருளையானது மின் தூண்டப்படும் முறையின் அடிப்படையில் அச்சுப்பொறிகள் வேறுபடுகின்றன.

electroplating:மின்முலாம் பூச்சு: மின்பகுப்பு முறையில் ஓர் உலோகத் தகட்டின் மீது இன்னொரு வேதிப்பொருளின் மெல்லிய படுகையினை படியச்செய்தல்.

electrostatic:மின்நிலைப்பு: நிலை மின்சாரம்:ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல்.இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் மைத்துகளை ஒளியுணர்வு உருளையில் ஒட்டவைக்கப் பயன்படுகிறது.தட்டை வரைவு பொறிகளிலும் (Plotters) இதுபோலவே பயன்படுகிறது.

electrostatic discharge:நிலை மின்னிறக்கம்: வெளி மூலத்திலிருந்து நிலைமின்சாரம் ஒரு மின்சுற்றுக்குள் மின்னிறக்கம் ஆகி விடல்.எடுத்துக்காட்டாக,ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகையை(Integrated Circuit Board)நாம் கையால் தொடும்போது,நம் உடலிலுள்ள நிலைமின்சாரம் மின்னிறக்கமாகி, அம்மின்சுற்றினை பழுதாக்கி விடுவதுண்டு.

electrostatic printer:நிலைமின் அச்சுப்பொறி.

elegant:நேர்த்தி;செம்மை:எளிமை, செறிவடக்கம்,திறன்,நயநுட்பம் அனைத்தும் சேர்ந்திருத்தல்.கணினி அறிவியலின் கோட்பாட்டு அடிப்படையில் நேர்த்தியான வடிவமைப்புக்கே (நிரல்கள்,நிரல்களுக்கு அடிப்படையான செயல்பாட்டு வரைவுகள்,வன்பொருள் ஆகியவற்றில்) முன்னுரிமை தரப்பட வேண்டும். ஆனால் கணினித் தொழிலின் வளர்ச்சி வேகத்தில் ஓர் உற்பத்திப் பொருளின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்