பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

element, AND

167

ellipsis


என்பதற்காக பெரும்பாலும் நேர்த்தியான வடிவமைப்பு புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாய், திருத்துவதற்குக் கடினமான குறைபாடுகளை (bugs) அவை கொண்டுள்ளன.

element, AND : உம் உறுப்பு.

element, active : செயற்படு மூலகம், செயற்படு உறுப்பு: செயற்படுதனிமம்.

elementary item : தொடக்கநிலை உருப்படி.

elevator : மேலேற்றி : கணினித் திரையில் ஓர் ஆவணத்தை அல்லது ஓர் படிமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, முழுமையாகப் பார்த்தறிய கிடைமட்ட, செங்குத்து உருள் பட்டை (Scroll Bar) களைப் பயன்படுத்துகிறோம். உருள்பட்டையில் மேலும் கீழும் நகர்த்துமாறு அமைந்துள்ள ஒரு சதுரப் பெட்டி மேலேற்றி எனப்படுகிறது.

e-mail address: மின்னஞ்சல் முகவரி: மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். முதலில் முகவரியாளரின் பெயர். அடுத்து @ என்னும் அடையாளம். மூன்றாவதாக, இணைய தளப் பெயரைக் கொண்டிருக்கும். அப்பெயரில் அஞ்சல் வழங்கன் (mail server) கணினியின் பெயர் மற்றும் களப்பெயர் இடம் பெற்றிருக்கும். (எ-டு) Jenny@md2.vsnl.net.in

ஜென்னி என்பவர் விஎஸ்என்எல் என்ற நிறுவனத்தின் எம்.டி2 என்னும் கணினியில் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக் கிறார். net என்பது பெருங்களப் பெயர். in என்பது இந்தியா என்னும் நாட்டைக் குறிக்கும் புவிப்பிரிவுக் களப்பெயர். இம்முகவரியை, ஜென்னி அட் எம்.டி2 டாட் விஎஸ்என்எல் டாட் நெட் டாட் இன் என்று உச்சரிக்க வேண்டும்.

elevator seeking : மேலேற்றி தேடல்: ஒரு நிலைவட்டிலிலுள்ள தகவலைத் தேடிப்பெற பல்வேறு கோரிக்கைகள் எழும்போது, படிப்பு/எழுது முனைக்கு அருகிலுள்ள தகவல் என்ற அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி செயலாக்குவதன் மூலம், முனையின் இயக்கத்தைக் குறைப்பதுடன், நிலைவட்டின் அணுக்க நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

elite : எலைட் : 1. ஓர் அங்குல இடத்தில் 12 எழுத்துகள் அச்சிடும் வகையில் அமைந்த ஒரே அகலத்தில் அமைந்த எழுத்துருவின் உருவளவு எலைட் எனப்படுகிறது. 2. வெவ்வேறு உருவளவுகளில் அமைகின்ற ஒரே அகல எழுத்துரு (Font) ஒன்றின் பெயர்.

ellipsis : முப்புள்ளி : 1. ஒரு விவரத்தை எழுதிச் செல்லும்போது அது முற்றுப் பெறாத நிலையில் முப்புள்ளி (...) இட்டு முடிப்பது வழககமாகும. முழுவதையும் சொல்லாமல் ஒரு பகுதியை மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்ளும் போதும் முப்புள்ளி இடுவோம். 2. விண்டோஸ் பயன்பாடுகளில் பட்டிப் பட்டையில் (Menu Bar) உள்ள விருப்பத் தேர்வுகளில் (Menu Options) முப்புள்ளி இடப்பட்டதைத் தேர்வு செய்தால் ஓர் உரையாடல் பெட்டி தோற்றமளிக்கும். 3. நிரலாக்கத்திலும், மென்பொருள் குறிப்பேடுகளிலும், ஒரு கட்டளை வரியிலுள்ள முப்புள்ளி, கட்டளைக் கட்டமைப்பிலுள்ள சில உறுப்புகள் திரும்பத் திரும்ப இடம் பெறுவதைக் குறிக்கும்.