பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ELM

168

ern dash


ELM : எல்ம்: இஎல்எம் : மின்னணு அஞ்சல் என்று பொருள்படும் Electronic Mail என்பதன் சுருக்கம். யூனிக்ஸ் இயக்க முறைமையில் மின்னஞ்சல் எழுதவும் படிக்கவும் பயன்படும் ஒரு நிரல். எல்ம் நிரல் ஒரு முழுத்திரை உரைத் தொகுப்பானைப் பெற்றுள்ளது. யூனிக்ஸிலுள்ள மெயில் நிரலைக் காட்டிலும் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. ஆனால், பைன் (pine) என்ற மின்னஞ்சல் நிரலின் வருகைக்குப்பின் எல்ம் செல்வாக்கு இழந்தது.

E-mail filter : மின்னஞ்சல் சல்லடை ; மின்னஞ்சல் வடிகட்டி மின்னஞ்சல் கிளையன் (Client) மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. வருகின்ற அஞ்சல்களை பொருளடிப்படையில் பிரித்து வெவ்வேறு கோப்புறைகளில் சேமித்து வைக்கும். அன்பரசு மாமாவிடமிருந்து வரும் மடல் களை அன்பரசு என்னும் கோப்புறையில் சேமிக்கலாம். அதுமட்டுமின்றி, வேண்டாதவர்களிடமிருந்து வரும் மடல்களை வடிகட்டி நிறுத்திவிடும் சல்லடை வசதியும் உண்டு. balan@yahoo.com என்ற முகவரியிலிருந்து வரும் மடல்களைப் புறக்கணிக்குமாறு வடிகட்டி அமைக்க முடியும். அல்லது இன்னாரிடமிருந்து வரும் மடல்களை மட்டும் அனுமதிக்குமாறும் வடிகட்டி அமைக்கலாம்.

embedded chips : உட்பொதி சிப்புகள்; உள்ளமைச் சிப்புகள்.

embedded controller : உட்பொதி கட்டுப்படுத்தி : கணினியின் சாதனங்களை (நிலைவட்டு போன்றவை) இயக்குகின்ற இணைப்புக் கருவிகள் நுண்செயலிக்கு வெளியே தனிக்கருவியாகவே இருப்பதுண்டு. அப்படி இல்லாமல், அக்கருவியின் செயல்பாடுகளை செயலியே கவனித்துக் கொள்ளுமாறும் இப்போது மேம்பட்ட செயலிகள் உருவாக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு மின்சுற்று நுண்செயலியில் உள்ளமைந்திருக்கும். இந்த மின் சுற்றுப் பலகை, கணினியில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும்.

embedded hyperlink : உட்பொதி மீத்தொடுப்பு: ஓர் உரை ஆவணத்தில் ஒரு வளத்துக்கான மீத்தெடுப்பு உரைகளுக்கிடையே அமைந்திருத்தல். அல்லது அந்த ஆவணத்திலுள்ள ஒரு பட உருவத்துடன் மீத்தொடுப்பு இணைந்திருக்கலாம்.

embedded interface : உட்பொதி இடைமுகம் : ஒரு வன்பொருள் சாதனத்தின் இயக்கி மற்றும் கட்டுப் பாட்டுப் பலகையிலேயே உள்ளிணைக்கப்பட்ட இடைமுகம். இதனால் அச்சாதனத்தை கணினியின் முறைமைப் பாட்டையில் (System Bus) நேரடியாக இணைக்க முடியும்.

embedded object : உட்பொதி பொருள்; உள்ளிடப்பட்ட பொருள்.

embedded version :உட்பொதி பதிப்பு.

embedding styles: உட்பொதி பாணிகள்.

emboss : உந்துவி.

em dash : எம் டேஷ் : ஒரு சொற்றொடரின் முறிவை அல்லது குறிக்கீட்டைக் குறிக்கப் பயன்படும் நிறுத்தற்குறி (-). தட்டச்சு அளவீட்டில் அந்தக் கோட்டின் நீளம், சில எழுத்துருக்களில் M என்ற எழுத்தின் அகலத்துக்குச் சமமாக இருப்பதால் இப்பெயர் பெற்றது.