பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

emitter coupled logic

169

em space


emitter coupled logic : உமிழி பிணைப்புத் தருக்கம்.


emitter,character : வரிவடிவ உமிழி;எழுத்துரு ஒளிர்வி.


e-money or emoney : மின்பணம் :மின்னணுப் பணம் என்பதன் சுருக்கம். இணையத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் பணத்திற்கான பொதுப்பெயர்.


emotag : உணர்ச்சி ஒட்டு; உணர்ச்சிக் குறிச்சொல் : இணைய ஆவணங் களில்,வலைப்பக்கங்களில் ஏராளமான ஹெச்டிஎம்எல் ஒட்டுகள் இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. <Βody>... </Body>,<TR>...</TR>, என்பது போல அவை அமையும். அது போலவே ஒரு மின்னஞ்சலில் அல்லது செய்திக் குழுக்கட்டுரைகளில்,கட்டுரையாசிரியர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். இவையும் ஹெச்டிஎம்எல் ஒட்டுகள் போலவே அடைப்புக் குறிகளுக்குள் முன் ஒட்டு பின் ஒட்டு என இணையாக அமையும்.இரண்டுக்கும் நடுவில் சொல்,சொல் தொடர் இருக்கலாம்.(எ-டு).(joke)you didn't think that would really be a joke here, did you? (joke) சில ஒட்டுகள், ஒற்றையாகவும் அமையும்(எ-டு)(gris).


emoticon : உணர்ச்சிச் சின்னம் : ஒரு குறித்தொடர் பக்கவாட்டிலிருந்து பார்த்தால் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்தும் முக வனைபோலத் தோற்றமளிக்கும்.பெரும்பாலும் இவ்வகை உணர்ச்சிச் சின்னங்கள் மின்னஞ்சல் அல்லது செய்திக் கட்டுரைகளில் ஒரு சொல்தொடரை அடுத்து கருத்துரை போல அமையும்.

(எ-டு). :-) :-C :-( ) :-1 :-S


employment centre : வேலை தேடு மையம்;வேலை வாய்ப்பு மையம்.


EMS:இஎம்எஸ்:விரிவாக்க நினைவக வரன்முறை என்ற பொருள்படும் Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இன்டெல் 8086 நுண்செயிலிச் சொந்தக் கணினிகளில் மெய்ம்முறை வரையெல்லையான 1 மெகா பைட்டு வரம்பைத் தாண்டி நினைவகத்தை விரிவாக்கும் நுட்பம்.நுண் செயலிகளின் முந்தைய பதிப்புகளில்,இஎம்எஸ் என்பது எல்லையைத் தாண்டி கூடுதல் நினைவகத்தை அணுக ஏதுவாக கூடுதலான 16 கேபி நினைவகச் சிப்புகள் பொருத்தப் பட்டு மென்பொருள் மூலம் அவற்றை அணுக வழி செய்யப்பட்டிருந்தன.இன்டெலின் பிந்தைய பதிப்புகளில் இஎம்எஸ் என்பது இஎம்எம் 386 (எம்எஸ்டாஸ் 5.0)என்பது போன்று மென்பொருள் நினைவக மேலாளர்களாக இருந்தன. இப்போதைய கணினிகளில் 1எம்பி என்கிற வரம்பு ல்லை. 80386 மற்றும் மேம்பட்ட செயலிகளில் செயல்படும் கணினிகளில், பாதுகாக்கப்பட்ட முறையில் பழைய பயன்பாடுகளை இயக்க இஎம்எஸ் பயன்படுகிறது.


em space:எம் இடவெளி:ஒரு தட்டச்சு அளவீட்டு அலகு.ஒரு குறிப்பிட்ட எழுத்துருவின் உருவளவைக் குறிப்பதாக இருக்கும். பெரும் பாலான எழுத்துருக்களில் இந்த இடவெளி பெரிய M எழுத்தின் அகலத்துக்கு சமமாகும்.இதனாலேயே இப்பெயர் ஏற்பட்டது.