பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

engineering workstation

171

enhanced parallel port


மென்பொருள் தயாரிப்பாளர்க்கும், அந்த மென்பொருளை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துபவருக்கும் இடையே வினியோகம், மறு விற்பனை, கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு போன்றவை தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளும் சட்ட முறையான ஒப்பந்தம்.


engineering workstation : பொறியியல் பணிநிலையம்.


enhanced graphics adapter (EGA) : மேம்பட்ட வரைகலை ஏற்பி, மேம் பட்ட வரைவியல் தகவி.


energy star : ஆற்றல் நட்சத்திரம்; ஆற்றல் விண்மீன் : கணினியை இயக்கி வைத்துவிட்டுப் பணிபுரியாமல் இருக்கும் நேரத்திலும் காட்சித் திரை, நிலைவட்டு, நுண்செயலி, தாய்ப்பலகை ஆகியவை மின்சக்தியைச் செலவழித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் வீணாகும் மின்சாரம் ஏராளம். அமெரிக்க நாட்டில் அனைத்துக் கணினிகளிலும் பணிபுரியாதபோது வீணாகும் மின் சாரத்தை சேமிக்க முடிந்தால் மூன்று பெரும் அணுமின் நிலையங்களை மூடி விடலாம் என்று ஒரு கணக் கெடுப்புக் கூறுகிறது. இந்நிலையை மாற்ற அமெரிக்க அதிபர் கிளின்டன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையிடம் ஒரு மாற்றுவழி காணச் செய்தார். அவர்களின் திட்டப்பணி அடிப்படையில், கணினியில் பணியாற்றாதபோது மிகக் குறைந்த அளவு மின்சாரமே செலவாகுமாறு கணினி உற்பத்தியாளர்கள் பணிக்கப்பட்டனர். கணினி இயக்க நிலையில் பணி புரியாதபோது தாய்ப்பலகை, நுண் செயலி, நிலைவட்டு, காட்சித் திரை ஆகியவை 50 விழுக்காடு மின் சாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு கணினிகள் வடிவமைக்கப்பட்டன. காட்சித்திரை குறிப்பிட்ட நேரம்வரை பயன் படுத்தப்படாவிட்டால் குறைந்த மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு உறக்கநிலைக்கு மாறி விடும். இதுபோன்ற கணினி, பசுமைக் கணினி (Green PC) என்றழைக்கப்படுகின்றது. ஆற்றல் நட்சத்திர ஒட்டிகளை (stickers) கொண்டிருக்கும். enhanced graphics display மேம்பட்ட வரைகலைக் காட்சி.


Enhanced Integrated Drive Electronics EIDE : மேம்பட்ட ஒருங்கினை இயக்க மின்னணுவியல் (இஐடிஇ) : ஒரு வட்டினை இயக்கக் கூடிய கட்டுப்பாடு மின்சுற்றுகள் உள்ளிணைக்கப்பட்ட வட்டு இயக்க வடிவமைப்பான ஐடிஇ தரமுறையின் விரிவாக்கமே இஐடிஇ. இவை, முறைமைப் பாட்டையில் (system bus) தரப்பட்ட இடை முகங்களை இணைக்க உதவுகின்றன. முன்னில் லாத வெடிப்புத் தகவல் பரிமாற்றம் - நேரடித் தகவல் அணுக்கம் போன்ற கூடுதல் சிறப்புக் கூறுகள் உள்ளன. அது மட்டுமின்றி இஐடிஇ இலக்கம் 8.4 கிகாபைட்டுகள் வரை ஏற்கும். (ஐடிஇயில் 528 மெகா பைட்டு வரைதான்). ஏடிஏ-2 இடைமுகப்பை ஏற்கும். வினாடிக்கு 13.2 எம்பி தகவல் பரிமாற்றம் சாத்தியம் (ஐடிஇ யில் 3.3 எம்பி தான்!). ஸ்கஸ்ஸி (SCSI) இயக்கங்கள் அளவுக்குத் திறனுடையது. ஆனால் அவற்றை விட விலை மலிவானது.


enhanced parallel port : மேம்பட்ட இணைநிலைத் துறை : அச்சுப் பொறி, புற வட்டியக்ககம், நாடா இயக்ககம் போன்ற புறச் சாதனங்