பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enterprise model

173

EPS


யங்களின் ஒருங்கிணைப்பு மூலம் கணினிச் செயல்பாடுகளை மேற் கொள்ளல். பெரும்பாலும் அத்தகைய பிணையங்கள் வேறுபட்ட பணித்தளம், வேறுபட்ட இயக்க முறைமை / நெறிமுறைகளைக் கொண்டவையாகவும், வேறுபட்ட பிணையக் கட்டமைப்புகளைக் கொண்டவையாகவும் இருப்பதுண்டு.

enterprise model:தொழிலக மாதிரியம்.

enterprise network : தொழிலக பிணையம் : பெருந் தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் கணினிப் பிணையம் அல்லது பிணையங்களின் ஒருங்கிணைப்பு. அத்தொழில் நிறுவனத்தின் பல்வேறு கணினிச் செயலாக்கத் தேவைகளை நிறைவு செய்வதாக அது இருக்கும். இத்தகைய பிணையம் பெரும்பாலும் விரிந்து பரந்த புவி எல்லைகளைக் கொண்டிருக்கும். வேறுபட்ட பணித்தளம், இயக்க முறைமை/நெறிமுறை/பிணையக் கட்டமைப்புக் கொண்டவையாக இருக்கும்.

enterprise scheme : தொழிலக திட்டமுறை.

entire column : நெடுக்கை முழுதும்.

entire row : கிடக்கை முழுதும்.

entity life history : உட்பொருள் வாழ்க்கை வரலாறு.

entity model : உட்பொருள் மாதிரியம்.

entity relationship model : உட்பொருள் உறவுமுறை மாதிரியம்.

entity sub type: உட்பொருள் துணை வகை.

enumerated data type : எண்ணிட்ட தரவு இனம்; பெயர்மதிப்பெண் தரவு இனம் : கணினி மொழிகளில் பல்வேறு தரவு இனங்கள் கையாளப்படுகின்றன. முழுஎண் (Integer) மெய் எண் (Real), எழுத்து (Character), சரம் (String), தேதி (Date), ஆமில்லை (Boolean) போன்றவை அவற்றுள் சில. சிலவேளைகளில் 1,2,3.... போன்ற எண் மதிப்புகளுக்குப் பதில் Sun, Mon, Tue என்றோ, Jan, Feb, Mar .. என்றோ பெயர் மதிப்புகளைப் பயன்படுத்துவது நிரலாக்கத்தில் எளிதில் புரியும்படி இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் பெயர் மதிப்புகளைக் கொண்ட எண் விவர இனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். (எ-டு). enum day (Sun, Mon, Tue ...) enum month (Jan, Feb, Mar ...) இங்கே, Sun, Mon ... Jan, Feb, ... ஆகியவை பெயர் மதிப்பாக இருந்த போதிலும், கணினி அவற்றை 0,1,2,3 என்றே எடுத்தாளும்.

envelopes and lables : உறைகளும் முகப்புச் சீட்டுகளும்; உறைகளும் சட்டைகளும்; உறைகளும் முகவரிச் சிட்டைகளும்.

EOF : கோப்பு இறுதி.

EOF exception : ஈஓஎப் விதிவிலக்கு.

epitaxial layer : எபீடேக்ஸியல் படுகை அல்லது அடுக்கு: குறைகடத்திகளில் கீழடுக்கின் திசையிலேயே அமைந்துள்ள படிகப்படுகை.

EPS : எப்ஸ்; இபீஎஸ் : பொதியுறையிட்ட போஸ்ட் ஸ்கிரிப்ட் என்று பொருள்படும் Encapsulated Post Script என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு போஸ்ட் ஸ்கிரிப்ட் கோப்பு வடிவாக்கம், ஒரு தனித்த உள்பொருளாகப்