பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

escape code

175

etching


escape code : விடுபடு குறிமுறை.

escape key : விடுபடு விசை : கணினி விசைப்பலகையிலுள்ள ஒரு விசை, இதனை அழுத்தும்போது, குறிப்பிட்ட செய்தி குறியீடாகக் கணினிக்கு தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் விடுபடு விசையை அழுத்தும்போது முந்தைய நிலைக்குத் திரும்பலாம். பட்டித் தேர்வுகளில் முந்தைய மெனுநிலைக்குத் திரும்பும். சிலவற்றில் நிரலைவிட்டு வெளியேறவும் இவ்விசை உதவும்.

escape sequence : விடுபடு குறித்தொடர் : விடுபடு குறியை முன்னொட்டாகக் கொண்டு தொடரும் குறித்தொடர். பதின்ம எண் முறையில் விடுபடு விசையின் ஆஸ்க்கி மதிப்பு 27. பதினாறெண் முறையில் 1B ஆகும். இதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு குறிகள் அமையும். ஓர் ஆவணத்தில் உரையின் நடுவே விடுபடு குறித்தொடர் அமைந்திருப்பின் கணினியானது அதனைச் சாதாரண உரையாக எடுத்துக் கொள்ளாமல், கட்டளையாகக் கருதி அதனை நிறைவேற்றும். அக்கட்டளை ஒரு சாதனம் சார்ந்த அல்லது நிரலுக்குரியதாக இருக்கலாம். (எ-டு) ; சி-மொழியில், printf ("One \tTwo"); என்ற கட்டளை, one two என்று இரு சொற்களுக்கிடையே நிறைய இடம் விட்டுக் காட்டும். prints ("One\nTwo");

என்ற கட்டளை, one two என்று அடுத்தடுத்த வரியில் காட்டும். இங்கே, \t, \n என்ற குறியீடுகள் விடுபடு குறித்தொடர் ஆகும்.

ESC character : விடுபடு எழுத்து; விடுபடு குறி : ஆஸ்கி குறித்தொகுதியில் அமைந்துள்ள 32 கட்டுப்பாட்டுக் குறிகளுள் ஒன்று. இது பெரும்பாலும் விடுபடு குறித் தொடரில் முதல் குறியாக அமையும். அச்சுப்பொறி போன்ற சாதனத்துக்குக் கட்டளை தரும் குறித்தொடராக அமைந்த சரமாக இருக்கலாம். கணினி, விடுபடு குறியின் மதிப்பை 27 அல்லது 1B என்றே எடுத்துக் கொள்ளும்.

ESDI : எஸ்டி; இஎஸ்டிஐ மேம்படுத்திய சிறு சாதன இடைமுகப்பு என்று பொருள்படும் Enhanced Small Device Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வட்டுகள் கணினியுடன் அதிவேகத்தில் தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு சாதனம். எஸ்டி இயக்ககம் வினாடிக்கு 10 மெகா பைட்டு அளவில் தகவல் பரிமாற்றம் செய்யும். இந்த வேகத்தை இருமடங்காக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு.

ESP IEEE standard: இஎஸ்பி ஐஇஇஇ செந்தரம் : Encapsulating Security Payload IEEE Standard என்பதன் சுருக்கம். இணைய நெறிமுறை யான ஐபீ : (Internet Protocol) மூலம் அனுப்பப்படும் செய்தியின் நம்பகத்தன்மை மற்றும் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்கான தரக்கட்டுப்பாடு. சில சூழ்நிலைகளில் ஐபீ தகவல் செய்திக்கு சான்றுறுதி வழங்குவதாகவும் அமையும்.

.et : இடி : இணையத்தில் ஓர் இணைய முகவரி எத்தியோப்பா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக் கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர்.

etching : செதுக்கல்; பொறித்தல்.