பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

e-text

176

exa


e-text : மின்னுரை : மின்னணு உரை என்பதன் சுருக்கம். மின்னணு ஊடகத்தில் நிகழ்நிலையில் (online) கிடைக்கும் ஒரு புத்தகம் அல்லது உரை அடிப்படையிலான ஆவணம். மின்னுரையை நிகழ் நிலையில் படிக்கலாம். அல்லது பயனாளரின் கணினியில் பதிவிறக்கி அகல்நிலையில் (offline) படித்துக் கொள்ளலாம்.

ethics : ஒழுகலாறு: அறவியல் கோட்பாடு.

eudora : ஈடோரா : ஒரு மின்னஞ்சல் கிளையன் (Client) நிரல். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் ஸ்டீவ் டார்னர் என்பவர் மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படும் இலவச மென்பொருளாய் உருவாக்கியது. இப்போது மெக்கின்டோஷ் மற்றும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணினிகளில் செயல்படக்கூடிய இலவச மற்றும் விற்பனைக்கான மென்பொருளாய் குவால்காம் நிறுவனம் உருவாக்கி வெளியிட்டு வருகிறது.

event-driven environment : நிகழ்வுத் தூண்டல் சூழல்.

event-driven language : நிகழ்வுத் தூண்டல் மொழி.

event driven programme : நிகழ்வுத் தூண்டல் நிரல்.

event-handler : நிகழ்வுத் கையாளி.

event-driven processing : நிகழ்வுத் தூண்டல் செயலாக்கம் : ஆப்பிள் மெக்கின்டோஷ், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸ், ஒஎஸ்/2 போன்ற மிகவும் மேம்பட்ட இயக்க முறைமைக் கட்டமைப்புகளில் இடம் பெற்றுள்ள ஒரு நிரல் பண்பு. நிகழ்வுகள் பல்வேறு வகைப்பட்டவை. சுட்டியின் ஒரு பொத்தானை சொடுக்குவது, விசைப்பலகையில் ஒரு விசையை அழுத்துவது, வட்டினைச் செருகுவது, ஒரு சாளரத்தின் மீது சொடுக்குவது இவையெல்லாம் நிகழ்வுகளே. தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள் வரிசையாக அமைகின்றன. நிரலானது ஒவ்வொரு நிகழ்வாக ஏற்று, அதற்கேற்ப செயல்படும். சில வேளைகளில் சில நிகழ்வுகள் முன்னுரிமையுள்ள இன்னொரு நிகழ்வைத் தூண்டலாம்.

event-driven programming: நிகழ்வுத் தூண்டல் நிரலாக்கம்; நிகழ்வு முடுக்க நிரலாக்கம் : விசையை அழுத்துதல், சுட்டியைச் சொடுக்குதல் போன்ற நிகழ்வுகளின்போது செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிரலாக்கம் செய்யும் முறை. முதன்முதலாக ஆப்பிள் மெக்கின்டோஷில் நிகழ்வு முடுக்க நிரல்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. ஆனால் இப்போது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், யூனிக்ஸில் எக்ஸ்-விண்டோஸ் போன்ற அனைத்து வரைகலைப் பணித்தளங்களிலும் நிகழ்வு முடுக்க நிரலாக்கமே பின்பற்றப்படுகிறது.

evolutionary refinement : படிமலர்ச்சிச் செம்மையாக்கம்.

Exa: எக்ஸா, இஎக்ஸ்ஏ : ஒரு குவின்டில்லியனை (10") குறிக்கும் முன்னொட்டுச் சொல். கணினிச் செயல்பாட்டில் (இரும எண்முறையில் அமைந்த), எக்ஸா என்னும் சொல் 1,152,921,504,608,846,976 என்ற மதிப்பைக் குறிக்கிறது. இது 2" ஆகும். ஏறத்தாழ ஒரு குவின் டில்லியனுக்குச் சமம்.