பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

exception

177

expanded memory specification



exception : விதிவிலக்கு; இயக்க நேரப் பிழை : ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏதேனும் பிழையிருப்பின் நுண்செயலி நிரலை நிறை வேற்றாமல் பாதியிலேயே நின்று விடும். இடையிலேயே நிரல் நின்றுவிடாமலிருக்க இயக்க நேரப் பிழைகளை எதிர்கொள்ள அதற் கேற்ற துணைநிரலை தனியே எழுத வேண்டும். இயக்க நேரப் பிழையும் ஒரு குறுக்கீடு (Interrupt) போலவே நுண்செயலியின் கவனத்தைத் திருப்பி வேறொரு துணை நிரலை இயக்கச் செய்யும்.


exception error 12 : இயக்க நேரப் பிழை 12 : டாஸ் இயக்க முறைமை யில் அடுக்கு (Stack) நிரம்பி வழிந் தால் ஏற்படும் பிழை. Config.sys கோப்பில் அடுக்குக்கு ஒதுக்கப் பட்டுள்ள நினைவக அளவை உயர்த்துவதன் மூலம் இப்பிழையைச் சரி செய்யலாம்.


exchange 1 : பரிமாற்றம்.


exchange 2 : இறைப்பகம்.


exchangeable disk : மாற்றிக் கொள்ளக்கூடிய வட்டு.


.exe : .இஎக்ஸ்இ : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் ஒருவகைக் கோப்பின் வகைப்பெயர். இயக்க (executable programe) என்பதைக் குறிக்கிறது. இத்தகு நிரலை இயக்க, கோப்பின் பெயரை வகைப் பெயரின்றி உள்ளீடு செய்து நுழைவு விசையை (Enter key) அழுத்தினால் போதும்.


exclusive : தனித்த.


executable : இயக்குநிலை : ஒரு நிரல்கோப்பு இயக்கப்படும் நிலையில் இருப்பது. இத்தகைய கோப்புகள் பெரும்பாலும் .bat, .com, .exe போன்ற வகைப்பெயர்களைக் கொண்டிருக்கும்.


executable file : கோப்பு நிறைவேற்றக் கூடிய கோப்பு.


execution interface : இயக்க இடை முகம.


execution slot : இயக்க செருகு வாய்; இயக்க துளைவிளிம்பு; இயக்கப் பொருத்துமிடம்.


execution time : இயக்க நேரம்: நினைவகத்திலிருந்து ஒர் ஆணையை எடுத்து அதனைக் குறிவிலக்கி (decode) செயல்படுத்த நுண்செயலி எடுத்துக் கொள்ளும் நேரம். கணினியின் உள் கடிகாரத் துடிப்பின் அடிப் படையில் இது அளக்கப்படும்.


execution trace cache : இயக்க சுவட்டு இடைமாற்று.


excution units: நிறைவேற்று அலகுகள்


executive information system : செயலாண்மை தகவல் முறைமை : ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்பு. தகவலுக்கு முக்கியத்துவம் தருவதால் இது தீர்வு உதவு முறைமை (Decision Support System - DSS) - க்கு மாறுபட்டது. பகுப்பாயவும் தீர்வு மேற்கொள்ளவும் உதவும்.


executive programme: நிரல்: செயலாண்மை நிரல்;இயக்கக் கட்டளைத் தொடர்.


expanded memory specification : விரிவாக்க நினைவக வரன்முறை.