பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

expand and colapse

178

extended ASCII



expand and colapse : விரிக்கவும் மூடவும்.

expansion : விரிவாக்கம் : கணினியில் சில புதிய வன்பொருள்களை இணைத்து, அடிப்படையான செயல்பாடுகளுக்கு அப்பாலும் அதன் திறனை உயர்த்தும் ஒரு வழிமுறை. பெரும்பாலும் அச்சு மின்சுற்று பலகைகளை (விரிவாக்கப் பலகைகள்) கணினியின்தாய்ப் பலகையினுள் விரிவாக்கச் செருகுவாய்களில் செருகி, விரிவாக்கம் செய்யப்படுகிறது.

expansion bit : விரிவாக்க பிட்; விரிவாக்கத் துண்மி.

expansion board : விரிவாக்கப் பலகை : கணினிக்கு அதிகப்படியான செயல்பாடுகளைச் சேர்க்கவும் அல்லது புதிய வளங்களைச் சேர்க்கவும் அதன் முதன்மையான தகவல் பரிமாற்றப் பாதையில் (பாட்டையில்) செருகப்படும் ஒரு மின் சுற்றுப் பலகை. நினைவகச் சில்லுகள், இயக்கக் கட்டுப்படுத்திகள், ஒளிக்காட்சி இணைநிலை மற்றும் நேரியல் துறைகள், அக இணக்கிகள் போன்றவை இவ்வகையில் அடங்கும். மடிக்கணினி மற்றும் ஏனைய கையடக்கக் கணினிகளில் பொருத்தப்படும் விரிவாக்கப் பலகைகள் பற்று அட்டை (credit card) வடிவில் இருக்கும். இவை பீசி அட்டைகள் எனப்படுகின்றன. இவை கணினியின் பின்பக்கம் அல்லது பக்கவாட்டில் பொருத்தப்படுகின்றன.

expert system shell ; வல்லுநர் முறைமை செயல்தளம்.

expiration date : முடிவுத் தேதி;

காலாவதித் தேதி : ஒரு மென் பொருளின் மாதிரியம் அல்லது பரிசோதனைப் பதிப்பு இயங்காமல் நின்றுவிடும் தேதி, ஒரு மென் பொருளை விற்பனைக்குக் கொண்டு வரும் முன்பு அதற்கான பரிசோதனைப் பதிப்பினை (Beta or Trial) பயனாளர்களுக்குத் தருவர். விற்பனைக்குள்ள சில மென்பொருள்களை சிறிது காலத்துக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பிடித்திருந்தால் பணம் செலுத்தும்படியும் கூறுவர். இதுபோன்ற மென்பொருள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இயங்காமல் போகும். அந்தத் தேதிக்கு முன்பாக புதிய பதிப்பைப் பெற வேண்டும்; அல்லது அதற்குரிய அணுகுக் குறியீட்டைப் பெற வேண்டும்; அல்லது பணம் செலுத்திப் பதிவெண் பெற வேண்டும்.

expire : முடிவு: காலாவதி : ஒரு மென்பொருள் முழுமையாக அல்லது ஒரு பகுதி செயல்படாமல் நின்றுபோதல். பரிசோதனைப் பதிப்புகள் பெரும்பாலும், முழுப் பதிப்பு வெளியிடப்படும் தருணத்தில் செயல்படாமல் போகுமாறு நிரலாக்கம் செய்திருப்பர்.

explore : முழுதும் தேடு.

explorer bar : எக்ஸ்புளோரர் பட்டை.

extention file: கோப்பு வகைப் பெயர்.

external, file : புறக் கோப்பு.

extent, file : கோப்பு நிட்டிப்பு.

extended ASCII : நீட்டித்த ஆஸ்கி : ஆஸ்க்கி (ASCII - American Standard Code for Information Interchnage) குறியீடுகள் மொத்தம் 256, 0 முதல் 255 வரை. நமது அன்றாடப் பயன் பாட்டில் 0 முதல் 127 வரை (7 பிட்டுகள்)மட்டுமே பயன்படுத்துகிறோம்.