பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

F

181

FAQ


F

F2F எஃப்.2.எஃப்.: முகத்துக்கு நேராக என்று பொருள்படும் Face to Face என்ற தொடரின் குறுஞ்சொல். இணையத்தில் மின்னஞ்சலில் பயன் படுத்தப்படுகிறது.

facetime : பார்வை நேரம் : மற்றொரு வருடன் நேருக்கு நேர் சந்தித்துச் செலவிட்ட நேரம். இணையம் வழிச் சந்திப்பைக் குறிப்பதில்லை.

facsimile transmission : தொகை நகல் செலுத்தம்; தொலை நகல் அனுப்பீடு.

fact template : பொருண்மைப் படிம அச்சு , நிகழ்வுப் படிம அச்சு.

factor, blocking : தடு காரணி

factor, scale : அளவுகோல் காரணி, அளவீட்டுக் காரணி.

failure : பழுது : கணினி அல்லது கணினி சார்ந்த சாதனம் சரியாகச் செயல்படாமை அல்லது செயல்படா நிலை. மின்சாரம் நின்று போனால் கணினி செயல்படாமல் போகிறது. இதைத் தவிர்க்க மின்கலன் உடைய காப்பு மின்சாதனம் (யுபிஎஸ்) பயன் படுத்தலாம். கணினியை முறைப்படி நிறுத்தி வைக்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருக்கும்.

failure rate : பழுது வீதம் : ஒரு கருவி செயல்படுவதிலுள்ள நம்பகத் தன்மையை அளவிடும் முறை. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் எத்தனை முறை பழுதாகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

failsafe : பழுது தடுப்பி

fair use : நியாயமான பயன்நுகர்வு; சட்டப்படி பயன்படுத்தல் : பதிப் புரிமை பெற்ற ஒரு மென்பொருளை சட்டப்படி பயன்படுத்திக் கொள்ளுதல்.

fan 1: விசிறி : கணினி உட்பாகங்கள், லேசர் அச்சுப் பொறிகள் தொடர்ந்து செயல்படும்போது வெப்பம் உண்டாகிறது. இதன் காரணமாய் அக்கருவி செயல்படாமல் போவ தற்கு வாய்ப்புள்ளது. இக்குறையைத் தவிர்க்க அக்கருவிகளுக்குள் விசிறி பொருத்தப்படுவதுண்டு. கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து ஒரு மெல்லிய இரைச்சல் ஒலி கேட்டதுண்டா? அது விசிறியின் சத்தமே.

fan2: பிரி; பிரிப்பு : அச்சுப்பொறியின் இரண்டு தாள்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் வரச் செய்வது.

tanzine : சுவைஞர் இதழ் : ஒரு குழு, ஒரு நபர் அல்லது ஒரு நடவடிக்கை மீது பற்றுக்கொண்டுள்ள சுவைஞர்களால் அத்தகைய சுவைஞர்களுக்காக இணையத்தில் மின்னஞ்சல் வழி யாக வழங்கப்படுகின்ற ஒரு இதழ்.

FAQ எஃப்ஏகியூ (அகேகே) : அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்று பொருள்படும்Frequently Asked Questions என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட பொருள்பற்றி பொது வான வினாக்களும் அவற்றுக்குரிய பதில்களும் அடங்கிய ஒர் ஆவணம். இணையத்தில் செய்திக் குழுக்களில் புதிய உறுப்பினர்கள், ஏற்கெனவே பலமுறை பதிலளிக்கப்பட்ட கேள்வி களை மீண்டும் மீண்டும் கேட்ப துண்டு. இப்படிப்பட்ட கேள்வி. பதில்களைத் தொகுத்து நூலாக வெளியிடுவார்.