பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

forward

182

far server



forward : முன்செல்.

fast-access storage: விரைவு அணுகு சேமிப்பகம்.

fast farward : வேகமாய் முன் நகர் .

fast SCSI : வேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 இடைமுகத்தில் ஒரு வகை. ஒரே நேரத்தில் எட்டு துண்மி(பிட்) களைப் பரிமாற்றம் செய்யும். வினாடிக்கு 10 மெகா துண்மி (மெகா பிட்)கள் வரை தகவல் பரிமாற்றம் இயலும், வேக ஸ்கஸ்ஸி இணைப்பி 50 பின்களைக் கொண்டது.

fast/wise SCSI வேக/விவேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 இடைமுகத் தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16 துண்மி (பிட்) தகவலைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள் வரை தகவல் பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் கொண்டது.

fat application : ஃபேட் பயன்பாடு: பவர்பீசி பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ், 68000 பிராசசர் பொருத்தப்பட்ட மெக்கின்டோஷ் ஆகிய இருவகைக் கணினிகளிலும் செயல்படுத்தக்கூடிய ஒரு பயன்பாடு.

fat binary : ஃபேட் இருமம் : பவர்பீசி பிராசசர் அடிப்படையிலான மெக் கின்டோஷ், 68000 பிராசசர் அடிப் படையிலான மெக்கின்டோஷ் ஆகிய இருவகைக் கணினியிலும் செயல்படக்கூடிய ஒருவகை பயன் பாட்டு வடிவாக்கம்.

fat client : கொழுத்த கிளையன் : ஒருவகை கிளையன்/வழங்கன் கட்ட மைப்பில் செயல்படும் கிளையன் கணினி. இவ்வகை அமைப்பில் பெரும்பாலான அல்லது அனைத்துச் செயலாக்கங்களையும் கிளையன் கணினியே செய்து கொள்ளும். வழங்கள் கணினி மிகச் சிலவற்றைச் செய்யும் அல்லது எதையுமே செய் யாது. தகவலை வெளியிடும் பணி யையும், செயல்கூறுகளையும் கிளை யன் கணினியே கவனித்துக் கொள்ளும். வழங்கன் கணினி, தகவல் தளத்தை மற்றும் அதனை அணுகுதல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்ளும்.

FAT file system : ஃபேட் கோப்பு முறைமை : கோப்புகளை ஒழுங்கு படுத்தி மேலாண்மை செய்ய எம்எஸ்-டாஸில் மேற்கொள்ளப் படும் முறைமை. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் File Allocation Table என்பதன் சுருக்கமே FAT எனப்படுகிறது. ஒரு வட்டினை வடிவாக்கம் (Format) செய்யும்போது எம்எஸ்டாஸ் அவ் வட்டில் ஒரு தகவல் கட்டமைப்பை (Data Structure) உருவாக்குகிறது ஒரு கோப்பினை வட்டில் சேமிக்கும் போது, சேமித்த கோப்பின் விவரங் களை எம்எஸ்டாஸ் ஃபேட்டில் எழுதிக் கொள்ளும். பின்னாளில் ஃபைலின் விவரங்களைப் பயனாளர் கோரும்போது, டாஸ், ஃபேட்டின் உதவியுடன் ஃபைல் விவரங்களைக் கொணர்ந்து தரும். டாஸ் ஃபேட் கோப்பு முறைமையை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒஎஸ்/2, விண்டோஸ் என்டி மற்றும் விண் டோஸ் 98 ஆகியவை தமக்கேயுரிய கோப்பு முறைமைகளை (முறையே HPFS, NTFS, VFAT) ?பின்பற்றுவது டன் ஃபேட் முறைமையை ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றன.

fat server : கொழுத்த வழங்கன்; கொழுத்த சேவையகம் ஒரு