பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file type

187

finalizer



கோப்புப் பகிர்வு எனப்படுகிறது. ஒரே நேரத்தில் வேறுவேறு நிரல்கள் அல்லது வேறுவேறு கணினிகள் பயன்படுத்துகின்றன எனில் கோப்பு விவரங்கள் அதற்கேற்ற வடிவாக் கங்களில் மாற்றப்பட்டு அளிக்கப் பட வேண்டும். ஒரு கோப்பு, பல ராலும் கையாளப்படுகிறதெனில் அக்கோப்பினை அணுகுவது, நுழை சொல் (P6assword) பாதுகாப்பு மூலம் ஒழுங்குப்படுத்தப்படவேண்டும். ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை ஒன்றுக்கு மேற்பட்டோர் திருத்த முடியாதவாறு கோப்புப் பூட்டு முறை (File lock) இருக்க வேண்டும்.

file type : கோப்பு வகை : ஒரு கோப்பின் செயல்பாட்டு அல்லது கட்டமைப்புப் பண்புக் கூறுகளின் அடிப்படையில் கோப்பு வகைகள் அமைகின்றன. பெரும்பாலும் ஒரு கோப்பின் வகை அதன் பெயரைக் கொண்டே அடையாளம் காணப்படுகிறது. எம்எஸ்டாஸில் கோப்பின் வகைப்பெயர் (Extension) கோப்பின் வகையை அடையாளம் காட்டும். (எ-டு) DBF-தரவுத்தள கோப்பு; EXE- இயக்குநிலைக் கோப்பு.

File Transfer Access and Management (FTAM) : கோப்புப்பரிற்ற அணுகலும் மேலாண்மையும்.

file type : கோப்பு வகை.

file update : கோப்பு இற்றைநிலைப் படுத்தல்; கோப்பு புதுக்குதல்.

file spec : கோப்பு வரன்முறை.

file store : கோப்புச் சேமிப்பு.

filexibility : நெகிழ்வுத்தன்மை.

fill ; நிரப்பு,

fill colour : நிரப்பு நிறம்

film : படச்சுருள்.

film reader : படச்சுருள் படிப்பி.

filter by form : படிவவழி வடிகடடல்.

filtering programme: சல்லடை நிரல்; வடிகட்டி நிரல் : தகவலை வடி கட்டித் தேவையான விவரங்களை மட்டும் எடுத்துத் தரும் நிரல்.

filter by selection : தேர்வு மூலம் வடிகட்டல்.

filter keys : வடிகட்டி விசைகள் : விண்டோஸ் 95 இயக்க முறைமை யில் கன்ட்ரோல் பேனலில் அணுகும் முறை (Accessibility) விருப்பத் தேர்வு கள் உள்ளன. உடல் ஊனமுள்ள வர்கள் விசைப் பலகையைப் பயன் படுத்தும் முறைகள் அதில் உள்ளன. விசைப்பலகையிலுள்ள விசைகளின் மீது விரல்களை அழுத்தும்போது மெதுவான அல்லது தவறான விரல் அசைவுகளினால் ஏற்படும் பிழைகளைப் புறக்கணிக்குமாறு கணினிக்கு அறிவுறுத்த முடியும். இதற்கென வடிகட்டி விசைகள் வசதி உள்ளது.

filter excluding selection: தேர்ந்ததைத் தவிர்த்து வடிகட்டல்.

final form text DCA : இருதிவடிவ உரை டிசிஏ ஒத்திசைவில்லா இரண்டு நிரல்களுக்கிடையே தகவல் பரிமாறிக் கொள்ளும் பொருட்டு, அச்சிடுவதற்குத் தயாரான வடிவில் சேமித்து வைக்கப்படும் ஆவணத்தின் தரவரையறை. ஆவண உள்ளடக்கக் கட்டமைப்பு என்று பொருள்படும் Document Content Architecture என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர் டிசிஏஎன்பது.

finalize : முடிவுறுத்து.

finalizer : முடிவுறுத்தி.