பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

finally 188 fixed block length


finally : முடிவாக

find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி.

find and replace: கண்டறிந்து மாற்று find duplicates : போலிகளை கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. find unmatched : பொருந்தாதன கண்டறி. fine : தரமான. fine print : தரமான அச்சு. finger : ஃபிங்கர்: இது ஒர் இணையப் பயன்பாட்டு நிரல். இணையத்தில் நுழையும் ஒரு பயனாளர், இணையத் தில் நுழைந்துள்ள இன்னொரு பயனாளர் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள உதவும் நிரல். இன்னொரு பயனாளரின் மின்னஞ் சல் முகவரியைக் கொடுத்தால், அவரின் முழுப்பெயர் மற்றும் பிறர் அறிந்துகொள்ள அவர் அனுமதித் துள்ள மற்ற விவரங்களையும் பெற முடியும். அல்லது ஒரு பெயரைத் தந்து அப்பெயரில் உள்ளவர்கள் இணையத்தில் அப்போது உலா வரு கின்றனரா என்பதையும் அறியலாம். ஆனால், பிற வலைத் தளங்கள் இந்த நிரல் அணுகுவதற்கு அனுமதி தர வேண்டியது முக்கியமாகும். யூனிக்ஸ் பணித்தளத்தில் மட்டுமே செயல்பட்டு வந்த ஃபிங்கர் இப் போது வேறுபல பணித்தளங்களுக் கான வடிவங்களிலும் கிடைக்கிறது.

FIR port , எஃப்ஐஆர் துறை : வேக அகச்சிவப்புத் துறை என்று பொருள்படும்

Fast Infrared port: என்ற தொடரின் சுருக்கச் சொல் கம்பியில்லா உள்ளீட்டு/வெளியீட்டுத் துறை. பெரும்பாலும் கையி லெடுத்துச் செல்லும் கணினிகளில் இருக்கும். அகச்சிவப்பு ஒளிக்கதிர் மூலமாக புறச்சாதனங்களுடன் தகவலைப் பரிமாறிக் கொள்ளும்.

FIRST : ஃபர்ஸ்ட் ; நிகழ்வு எதிர்ச் செயல் மற்றும் பாதுகாப்பு குழுக் களின் அமைப்பு என்று பொருள் LGub Forum of Incident Response and Security Teams என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

இணையம் கழகம்  (Internet Society - ISOC) அமைப்பினுள் செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும். கணினி அமைப்புகளின் பாதுகாப்புக்கு ஏற் படும் ஆபத்துகளுக்கு எதிரான கூட்டு முயற்சியையும், தகவல் பகிர்வை யும் ஊக்குவிக்கும் பொருட்டு செர்ட் (CERT) அமைப்புடன் சேர்ந்து செயல்படுகிறது.

first in first out : முதல் புகு முதல் விடு; முதலில் வந்தது முதலில் செல்லும் : ஒரு கியூவில் நிற்பவர் களுள் முதலில் வந்தவரே முதலில் செல்ல முடியும். கணினியிலும் இது போல, ஒரு பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்டதே முதலில் நீக்கப் படுகின்ற முறை பல்வேறு செயலாக் கங்களில் பின்பற்றப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அச்சுப் பொறிக்கு அனுப்பப்பட்ட வணங்களின் பட்டியலில் முதலில் வந்ததே முதலில் அச்சிடப்படும்.

first-in-last-out : முதல் புகு கடைவிடு முதலில் வந்தது இறுதியில் செல்லும், fixed block length : நிலைத்த தொகுதி நீளம்.