பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fixed numeric format 189 flame war



fixed numeric format : மாறா எண் வகை வடிவம்.

fixed- head disc unit: நிலை முனை வட்டகம்.

fixed point representation : நிலைப் புள்ளி உருவகிப்பு.

fixed point notation : நிலைப் புள்ளி குறிமானம்: பதின்மப் புள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து இடம்பெறும் எண் வடிவாக்கம். இத்தகைய எண் வடிவம் கச்சிதமான திறன்மிக்க முழுஎண் வடிவத்துக் கும், பரந்த மதிப்புகளைச் சுட்ட வல்ல சிக்கலான மிதவைப் புள்ளி வடிவத்துக்கும் இடைப்பட்ட தாகும். மிதவைப் புள்ளி எண்களைப் போலவே, நிலைப்புள்ளி எண் களிலும் பின்னப்பகுதி உண்டு. ஆனாலும், மிதவைப் புள்ளியெண் கணக்கீடுகளைவிட நிலைப்புள்ளி யெண் கணக்கீடுகளுக்கு குறைந்த நேரமே ஆகும்.

fixed-programme computer : நிலை நிரல் கணினி.

fixed word length computer : நிலைச் சொல்நீளக் கணினி ஏறத்தாழ அனைத்து கணினிகளுக்கும் இவ் விளக்கம் பொருந்தும். ஒரு கணினி யில் நுண்செயலி, பிற வன்பொருள் பாகங்களுடன் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் முதன்மையான தகவல் பாட்டையில் ஒரே நேரத்தில் எத்தனை துண்மி (பிட்)களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்பதே ஒரு சொல் எனப்படுகிறது. ஒரு சொல் எனப்படுவது 2 பைட்கள் அல்லது 4 பைட்கள் நீளமுள்ளதாக இருக்கலாம். தற்போது புழக்கத்தி லுள்ள ஐபிஎம் மற்றும் மெக்கின் டோஷ் சொந்தக் கணினிகளில் பொதுவாக 2 பைட்டு, பைட்டு சொற்கள் கையாளப்படுகின்றன. 8 பைட்டு சொற்களைக் கையாளும் கணினிகளும் உள்ளன. நுண்செயலி யின் அனைத்துச் செயலாக்கங் களிலும் ஒரே அளவான சொல் கையாளப்படும் எனில் அது நிலைச் சொல் நீளக் கணினி எனப்படுகிறது.

fj : எஃப்ஜே : இணையத்தில், பிஜி நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

tlame bait : பிழம்புத் தீனி, எரிக் கொள்ளிக்கு எண்ணெய் உணர்ச்சி வயமான விஷயத்தில் சர்ச்சையைக் கிளப்பும் கருத்துகளை முன்வைத் தல். இந்தியாவைப் பொறுத்தவரை சாதி, மதம், வழிபாட்டு இடம் தொடர்பான கருத்துகள் இவ்வகை யில் அடங்கும். கணினித் துறை யைப் பொறுத்தவரை அஞ்சல் பட்டியல், செய்திக் குழுக்கள், ஏனைய நிகழ்நிலைக் கருத்தரங்குகளில் பிறரின் சினத்தைக் கிளறும் வகை யில் முன்வைக்கப்படும் ஒரு கருத்து.

famefest பிழம்பு விருந்து இணையத்தில் செய்திக் குழுவிலும் அல்லது பிற நிகழ்நிலைக் கருத் தரங்கிலும் சர்ச்சையைத் தூண்டும் வகையில் தொடர்ச்சியாக முன் வைக்கப்படும் செய்திகள்/ கருத்துரைகள்.

flamer : தீயாள்; நெருப்பாளி, பிழம்பர்: மின்னஞ்சலில், செய்திக் குழுக் களில், நிகழ்நிலை விவாத மேடை களில், நிகழ்நிலை அரட்டைகளில் சினமூட்டும், சர்ச்சைக்கிடமான செய்தியை அனுப்பி வைப்பவர்.

fame war : தீப்போர்; பிழம்புப் போர்: அஞ்சல் பட்டியல், செய்திக் குழு