பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flash BIOS

190

floating point number



மற்றும் பிற நிகழ்நிலைக் கருத் தரங்கில் காரசாரமான வாதப் பிரதி வாதமாக மாறிப்போகின்ற ஒரு கலந்துரையாடல்.

flash BIOS : அதிவிரைவு பயாஸ்.

flat :தட்டை.

flatbed plotter : கிடைத்தட்டை வரைவு பொறி, கிடைத்தட்டை வரைவி.

flatbed scanner: கிடைத்தட்டை வருடு பொறி, கிடைத் தட்டை வருடி ': இத்தகைய வருடு பொறியில் கிடைமட்டமாக தட்டையான கண்ணாடிப் பரப்பு இருக்கும். இதன்மீதுதான் புத்தகம் அல்லது தாள் ஆவணத்தைக் கிடத்த வேண்டும். அப்பரப்பின்கீழ் ஒரு வருடுமுனை அச்சுநகலின் உருப் படத்தை வருடிச் செல்லும். சில கிடைத்தட்டை வருடுபொறிகள் ஊடுகாண் (transparent) நகல்களை, காட்டாக சிலைடுகளை உருவாக்கும் திறனுள்ளவை.

flat file database : தடடைக்கோப்பு தரவுத் தளம் : அட்டவணை வடிவிலான தரவுத் தளம். ஒவ்வொரு தரவுத் தளமும் ஒரேயொரு அட்டவணையை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு நேரத்தில் ஒரு அட்டவணையில் மட்டுமே பணியாற்ற முடியும்.

flat file directory : தடடைக்கோப்பு கோப்பகம் : உள் கோப்பகங்கள் (Sub Directories) இல்லாத, கோப்புகளின் பட்டியலை மட்டுமே உள்ளடக்கிய ஒரு கோப்பகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

flat file system : தடடைக்கோப்பு முறைமை : படிமுறை அடுக்கு (hierarchieal order) இல்லாத ஒரு வகைக் கோப்புமுறை. இம்முறையில் வட்டில் உள்ள எந்த இரண்டு கோப்பும் ஒரே பெயரைக் கொண் டிருக்க முடியாது. அவை வெவ் வேறு கோப்பகத்தில் இருப்பினும் ஒரே பெயர் இருக்க முடியாது.

flatform : பணித்தளம்.

flat panel display : தட்டைப் பலகக் காட்சி,

flat screen : தட்டைத் திரை.

flat square monitor : தட்டைச் சதுர திரையகம்.

flexible disk: நெகிழ்வட்டு.

flickering :மினுக்கல்.

floating decimal arithmetic : மிதவைப் பதின்மக் கணக்கீடு.

floating point : மிதவைப் புள்ளி.

floating-point operation : மிதவைப் புள்ளி செயல்பாடு.

floating point representation :மிதவைப் புள்ளி உருவகிப்பு.

floating point constant : மிதவைப் புள்ளி மாறிலி ': ஒரு மிதவைப் புள்ளிப் பதின்ம எண் மதிப்பினைக் குறிக்கும் ஒரு மாறிலி.

floating point number : மிதவைப் புள்ளி எண் : கொடுக்கப்பட்ட ஒர் அடியெண்ணு(Base)க்கு ஏற்ப, பின்னம் மற்றும் அடுக்கெண் (Mantissa and exponent) ஆகிய இரு பகுதிகளைக் கொண்ட எண் வடிவம். பின்னம், பொதுவாக 0-1க்கு இடைப்பட்ட எண்ணாக இருக்கும். அதனை, அடியெண்ணின் மீது அடுக்கெண்ணை பத்தின் அடுக்காகக் கொண்டு பெருக்கினால் மிதவைப் புள்ளி எண்ணின் மதிப்பு கிடைக்கும்.