பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

floating point register 191 flush


0.12345x 10'

என்பது ஒரு மிதவைப் புள்ளி எண். இதில் 0.12345 என்பது பின்னம் (mantissa). 10 என்பது அடியெண் (Base), 3 என்பது அடுக்கெண் (Exponent). இதன் மதிப்பு 123.45 ஆகும். இதே எண்ணை

1.2345x10°

12.345x 10

என்றும் கூற முடியும். இங்கே புள்ளி இடம் மாறிக் கொண்டே இருப்ப தால், மிதவைப் புள்ளி எனப் பெயர் பெற்றது. சாதாரண அறிவியற் குறி Lorraorth (scientific notation) பத்தினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களைப் பயன் படுத்துகிறது. கணினியில் இரண்டினை அடியெண்ணாகக் கொண்ட மிதவைப் புள்ளி எண்களே பொதுவாக புழக்கத்தில் உள்ளன.

floating point register : மிதவை புள்ளியெண் பதிவகம் : கணினியில் மிதவைப் புள்ளி எண் மதிப்புகளை இருத்தி வைக்க வடிவமைக்கப்பட்ட பதிவகம்.

floating point type : மிதவைப்புள்ளி வகை.

floptical : நெகிழ்ஒளிவம் : காந்தம் மற்றும் ஒளிவத் தொழில் நுட்பங்களின் சேர்க்கை. இதனடிப்படை யில் உருவாக்கப்படும் 3.5 அங்குல சிறப்புவகை வட்டுகளில் மிக அதிகத் தகவல்களை பதிய முடியும். வட்டினில் காந்த வடிவிலேயே தகவல் எழுதப்படுகிறது. படிக்கப் படுகிறது. ஆனால், எழுது/படிப்பு முனை லேசர் கதிர்மூலம் இடம் நிறுத்தப்படுகிறது. இன்சைட் பெரிஃ பெரல்ஸ் என்னும் நிறுவனம் இச் சொல்லை உருவாக்கியது. வணிகக்குறியாகவும் பதிவு செய்யப்ப ட்டுள்ளது.

floptical drive நெகிழ்ஒளிவ இயக்ககம்.

flow : ஒழுக்கு பாய்வு.

flow analysis : ஒழுங்கு பகுப்பாய்வு: கணினி அமைப்பில் பல்வேறு வகையான தகவல்களின் போக்குவரத்தை ஆய்வு செய்யும் ஒரு வழிமுறை. குறிப்பாக, தகவலின் பாதுகாப்பு மற்றும் அதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் கட்டுப் பாடுகள் தொடர்பான ஆய்வாக இருக்கும்.

flow diagram : பாய்வு வரைபடம்

flow chart, detail : விவரப் பாய்வு நிரல்படம்.

flow chart, system : முறைமை பாய்வு நிரல்படம்.

flush : ஒழுங்கு சீர் : கணினித் திரையில் அல்லது தாளில் விவரங் கள் ஒரு குறிப்பிட்ட சீரமைவுடன் அமைந்திருப்பது. ஒழுங்கு-வலம் எனில் வலப்புறத்தில் எழுத்துகள் ஓரச் சீர்மையுடன் அமைந்திருத் தலைக் குறிக்கும். ஒழுங்கு இடம் எனில் இடப்புற ஓரச் சீர்மையைக் குறிக்கும்.

flush : வெளியெடு; வழித்தெடு; துடைத்தெடு; அகற்று : நினைவகத் தில் ஒரு பகுதியிலுள்ள விவரங் களைத் துடைத்தெடுத்தல். எடுத்துக் காட்டாக, வட்டுக் கோப்பு இடை நிலை (Butter) நினைவகத்திலுள்ள விவரங்களை அகழ்ந்தெடுத்து வட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். அதன்பின் இடைநிலை நினை