பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

forward chaining

195

frame source


forward chaining : முன்நோக்கு சங்கிலித் தொடர்: மேதமைக் கணினி முறைமைகளில் (Expert Systems) சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை. இம்முறையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு புறம். மெய்ம்மையான விவரங்கள் அடங்கிய தரவுத் தளம் இன்னொரு புறம். இரண்டிலும் தொடங்கி, இறுதியில் தரவுத்தள விவரங்களின் அடிப்படையில், விதிமுறைகளில் கூறப்பட்ட அனைத்து மெய்க்கூறுகளையும் நிறைவுசெய்யும் வகையில் இறுதி முடிவு எட்டப்படும்.

fourier transform ஃபூரியர் நிலைமாற்றம் : ஜீன் பாப்டிஸ்ட் ஜோசப் ஃபூரியர் (Jean Baptiste Joseph Fourier : 1768-1830) stairgoylb ஃபிரெஞ்சுக் கணித மேதை உருவாக் கிய ஒரு கணித வழிமுறை. அலைக் கற்றைப் பகுப்பாய்வு (Spectral Analysis), படிம செயலாக்கம் (Image Processing) போன்ற சமிக்கை உற்பத்திப் பணிகளிலும் ஏனைய சமிக்கைச் செயலாக்க முறைகளிலும் இக்கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. ஃபூரியர் நிலைமாற்றம் ஒரு சமிக்கை உருவாக்க மதிப்பை நேரம் சார்ந்த செயல்கூறாய் (function) மாற்றுகிறது. தலைகீழ் ஃபூரியர் நிலைமாற்றம் அலைவரிசை சார்ந்த செயல்கூறினை நேரம், வெளி அல்லது இரண்டும் சார்ந்த செயல் கூறாய் மாற்றித் தருகிறது.

fractional T1 : பின்ன டீ1 : டீ1 தடத்துக்கான ஒரு பகிர்மான இணைப்பு. 24T1 குரல் மற்றும் தகவல் தடங்களின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

frame (computer), main : பெருமுகக் கணினி

frame rate : சட்ட வீதம் : 1. ஒரு ராஸ்டர் வருடு கணினித்திரையில் காட்டப்படுவதற்கு முழு ஒற்றைத் திரை படிமங்கள் எவ்வளவு வேகத்தில் அனுப்பி வைக்கப்படு கின்றன என்பதைக் குறிக்கிறது. மின்னணுக்கற்றை வினாடிக்கு எத்தனை முறை திரையை ஆக்கிர மிக்க வேண்டும் என்பதைக் குறிக் கிறது. 2. அசைவூட்ட (Animation) செயல்பாடுகளில், ஒரு வினாடிக்கு எத்தனைமுறை ஒரு படிமம் புதுப் பிக்கப்படுகிறது என்பதைக் குறிக் கிறது. சட்டவீதம் வினாடிக்கு 14 சட்டங்களைவிட அதிகமாயின் அசைவூட்டம் உண்மையான இயக் கம் போலவே தோற்றம் அளிக்கும்.

frame relay assembler/disassembler: சட்டத் தொடர்பி தொகுப்பான் / பிரிப்பான் தடச் சேவை சாதனம் (Channel Service Unit - CSU), இலக்க முறைச் சேவை சாதனம் (Digital Service Unit - DSU), பிணையத்தை சட்டத் தொடர்பியுடன் இணைக்கும் திசைவி (router) ஆகிய மூன்றும் இணைந்தது. இச்சாதனம், சட்டத் தொடர்பிப் பிணையங்களில் தகவலைப் பொட்டலங்களாக மாற்றி அனுப்பி வைக்கும். மறு முனையிலிருந்து இதுபோல அனுப்பப்படும் பொட்டலங்களைச் சேர்த்து மூலத்தகவலாக மாற்றும். இம்முறையில் தீச்சுவர் (Firewall) போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. எனவே, தனியாக பிணையப் பாதுகாப்பு செயல் முறை சேர்க்கப்பட வேண்டும்.

frame source : சட்டமூலம் ஹெச்டிஎம்மில் சட்டச் சூழலில், ஒரு பொருளடக்க ஆவணம் மூல ஆவணத்தைத் தேடி, பயனாளர்