பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fred

196

free software


கணினியிலுள்ள உலாவி வரைந்துள்ள ஒரு சட்டத்துக்குள் காண்பிக்கும்.

fred : ஃபிரெட் : 1. எக்ஸ் 500-க்கான ஓர் இடைமுகப் பயன்நிரல். 2. கட்டளைத் தொடர் எடுத்துக்காட்டு களில் ஒரு மாறியின் பெயருக்காக நிரலர்கள் பலராலும் பயன்படுத் தப்படும் ஒரு சொல். ஒரு நிரலர் ஏற்கெனவே ஃபிரெட் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் இன்னுமொரு மாறியின் பெயர் இடம் பெறுமிடத்தில் பார்னே (Barnay) எனக் குறிப்பிடுவர்.

free BSD : இலவச பிஎஸ்டி : ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்காக இல வசமாக வெளியிடப்பட்ட பிஎஸ்டி யூனிக்ஸ் பதிப்பு. பெர்க்கிலி சாஃப்ட்வேர் டிஸ்ட்ரிபூஷன் என் பதன் சுருக்கமே பிஎஸ்டி எனப்படு வது. கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக் கழகத்தி லுள்ள பிஎஸ்டி அமைப்பு யூனிக்ஸ் இயக்க முறைமையை வளர்த் தெடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது. இன்றைக்கு யூனிக்ஸின் அங்கமாக இருக்கும் பல்வேறு சிறப்புக் கூறுகளும் பிஎஸ்டியால் உருவாக்கப் பட்டவை.

free - form language : சுதந்திர வடிவ மொழி; கட்டறு வடிவ மொழி : கட்டளைத் தொடர் ஒரு வரியில் எந்த இடத்திலும் தொடங்கலாம். கட்டளைச் சொற்கள் ஒரு வரியின் எவ்விடத்திலும் இடம் பெறலாம் என்று அமைந்துள்ள மொழி. சி மற்றும் பாஸ்கல் மொழிகள் இவ்வகையைச் சார்ந்தவை. ஃபோர்ட்ரான், கோபால் மொழிகள் அவ்வாறில்லை. கட்டளைச் சொற் கள் வரியின் குறிப்பிட்.. இடத்தில் தொடங்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் உண்டு.

free of cost : செலவில்லாமல்.

free-form text chart : தாராள வடிவ உரை நிரல் படம்.

free net : இலவச வலையம்.

free phone service : இலவச தொலை பேசி இணைப்புச் சேவை; இலவச இணைப்புச் சேவை.

free software : கட்டறு மென்பொருள்: இலவசமான மென்பொருள் மட்டு மன்று. கட்டுப்பாடற்ற சுதந்திர மென்பொருளுமாகும். மூல வரைவு உட்பட முழுமையாக இலவசமாக வெளியிடப்படும் மென்பொருள். பயனாளர்கள் அதனை இலவசமாகப் பயன்படுத்துவதுடன், விருப்பப்படி மாற்றியமைக்கலாம். மாற்றிய மைத்த பின் மீண்டும் அதனை இலவசமாகவே பிறருக்கு வழங்க வேண்டும். செய்யப்பட்ட மாற்றங் கள் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்க வேண்டும். மூல ஆசிரியரின் பெயர் அவருடைய பதிப்புரிமைச் செய்தி ஆகியவற்றை மாற்றவோ, நீக்கவோ கூடாது. இலவச மென்பொருளுக்கும் கட்டறு மென்பொருளுக்கும் வேறுபாடு உண்டு. இலவச மென்பொருளை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதன் மூலவரைவு கிடைக் காது. கிடைத்தாலும் மாற்றியமைக்க முடியாது. ஆனால் கட்டறு மென் பொருள் பொது உரிம ஒப்பந்த முறைப்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. கட்டறு மென்பொருள் என்னும் கருத்துரு, மாசாசூசட்ஸிலுள்ள கேம்பிரிட்ஜின் கட்டறு மென் பொருள் அமைப்பு (Free Software Foundation) உருவாக்கிய ஒன்றாகும்.