பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

full justification

199

fully formed character



full justification: முழுசீர்மை இருபுற ஒரச் சீர்மை : சொல் செயலாக்கம் (word processing) அல்லது கணினி பதிப்பகப் பணிகளில், ஒரு பக்கத் தில் அல்லது பத்தியில் தட்டச்சு செய்யப்பட்ட வரிகளை இடம், வலம் இருஒரங்களிலும் ஒரே சீராக அமைக்கும் செயல்பாடு.

full motion video : முழுதியங்கு நிகழ் படம், முழுதியங்கு ஒளிக்காட்சி : ஒரு வினாடிக்கு 30 படச் சட்டங்கள் (30 FPS-Frames per second) வீதம் திரையில் காண்பிக்கப்படும் இலக்க முறை ஒளிக்காட்சி (Digital Video).

full motion video adapter : முழுதியங்கு ஒளிக்காட்சி ஏற்பி; முழுதியங்கு ஒளிக்காட்சித் தகவி : கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை. ஒளிக்காட்சி நாடார் பதிவி (Video Casstte Recorder) போன்ற சாதனங்களிலிருந்து இயங்கு நிகழ்படங்களைக் கணினி யில் பயன்படுத்தும் இலக்கமுறை autų autors (AVI, MPEG, MJPEG போன்ற வடிவங்களில்) மாற்றித் தரும் அட்டை இது.

ful name : முழுப்பெயர் : ஒரு பய னாளரின் உண்மையான முழுப் பெயர். இது, பெரும்பாலும் முதல் பெயர், இடைப்பெயர் (அல்லது இடையெழுத்து), கடைப்பெயர் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். (எ-டு) டென்னிஸ் எம்.ரிட்சி, ஜான் எஃப். கென்னடி. ஒரு பயனாளரின் கணக்கு விவரத்தின் ஒரு பகுதியாக அவரைப் பற்றிய சொந்த விவரங்களும் கணினியில் பதிவு செய்யப் படுவதுண்டு. இயக்க முறைமை ஒரு பயனாளரை அடையாளம் காணப் பயன்படும் விவரங்களுள் அவரின் முழுப்பெயரும் ஒன்று.

full pathname: முழு பாதைகள் பெயர்: ஒரு படிநிலைக் கோப்பு முறை மையில் ஒவ்வொரு வட்டகத்திலும் வேர் காப்பகம் (Root Directory) தொடக்க நிலையாக உள்ளது. அதனுள் ஏனைய கோப்பகம்/ கோப்புறைகளும் அவற்றில் உள் கோப்பகம்/கோப்புறைகளும் அமைகின்றன. ஒரு கோப்பினை அணுகுவதற்கு அது சேமிக்கப் பட்டுள்ள வட்டகப் பெயர் (Drive Name), வேர் கோப்பகம், கோப் பகம், உள்கோப்பகங்களை வரிசை யாகக் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, myfile.doc என்னும் கோப்பு C வட்டகத்தில் Book என்னும் கோப்பகத்தில் Chapter என்னும் உள்கோப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது எனில், டாஸ் இயக்க முறைமையில், C:\B00K CHAPTERIAMYFILE.Doc என்பது அக்கோப்பின் முழுப்பாதையைக் குறிக்கும் பெயராகும்.

full-screen application: முழுத் திரை பயன்பாடு.

full version : முழுப்பதிப்பு.

fully formed character : முழுவடிவ எழுத்து அச்சுப் பொறிகளை தொட்டச்சுப் பொறி (Impact Printer), தொடா அச்சுப்பொறி (Non-Impact Printer) எனப் பிரிக்கலாம். புள்ளி யணி அச்சுப்பொறிகள் (Dotmatrix Printers), டெய்சி சக்கர அச்சுப் Quirosair (Daisy Wheel Printers) ஆகியவற்றைத் தொட்டச்சில் சேர்க்க லாம். மையச்சு (Inkiet), ஒளியச்சு (Laser) பொறிகளை தொடா அச்சில் சேர்க்கலாம். புள்ளியணி அச்சுப்