பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

giant magnetoresistive

205

global universal identification


என்பதைச் சுட்டும் புவியியல் பெருங்களப் பெயர்.

giant magneto resistive:மீக்காந்த எதிர்ப்பு மிகப்பெரும் காந்த எதிர்ப்பு.

GlF animation:ஜிஐஎஃப் அசைவூட்டம்.

GIF animator:ஜிப் அனிமேட்டர்:அசைவூட்ட ஜிஃப் படிமங்களை உருவாக்க உதவும் ஒரு மென்பொருள்.

Gigabit Ethernet:கிகாபிட் ஈதர்நெட்: பொதுவாக ஈதர்நெட் செந்தரம் 802.3ன் படி வினாடிக்கு 100 மெகாபிட் தகவல் பரிமாற்றமே இயலும்.ஆனால் ஐஇஇஇ-யின் 802.32 தர வரையறைப்படி முன்னதைப்போல இருமடங்கு வேகம்,அதாவது வினாடிக்கு ஒரு கிகாபிட்(IGpps) வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெறும். வழக்கமான ஈதர்நெட் செந்தரம் 802.3 வினாடிக்கு 100 மீமிகு மெகாபிட் தகவல் பரிமாற்றத்தை அளிக்கிறது.

gigabits per second:வினாடிக்கு ஒரு கிகாபிட். (ஜிபிபீஎஸ்)பிணையத்தில் தகவல் பரிமாற்ற வேகத்தைக் கணக்கிடும் அளவீடு.1,07,37,41,824 (230) துண்மிகளின்(பிட்டுகள்)மடங்காக அளவிடப்படுகிறது.

global group:பரந்த குழு:விண்டோஸ் என்டி உயர்நிலை வழங்கன் அமைப்பில் பயனர் குழுவின் பெயர்.ஒரு களப்பிரிவில் சிறப்புரிமை பெற்ற பயனாளர்களின் குழுவைக் குறிக்கிறது. இக்குழுவில் உளள பயனாளர்கள் தத்தம் களப்பிரிவில் மட்டுமின்றி அதற்கு வெளியிலுள்ள வளங்களையும்,வழங்கன்களையும், பணிநிலையங்களையும் அணுகுவதற்கு அனுமதியும் உரிமையும் பெற்றவர்கள்.

global positioning system:உலக இருப்பிட விவரம்.

globally unique identifier:உலகளாவிய தனித்த முத்திரை: மைக்ரோ சாஃப்டின் காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல்(COM) தொழில்நுட்பத்தில்,ஒரு பரந்த கணினிப் பிணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் இனப்பொருளுக்கான இடைமுகத்தை அடையாளம் காண உதவும் 16-பிட் பெயர்.பிணைய வழங்கன் கணினியிலுள்ள இடைமுக அட்டையின் பிணைய முகவரியையும், நேர முத்திரையையும் அப்பெயர் உள்ளடக்கியிருப் பதால்,பிறவற்றிலிருந்து பிரித்துக் காணும் தனித்த முத்திரை கிடைக்கிறது.இத்தகைய முத்திரைகள் ஒரு பயன்பாட்டு நிரல் மூலம் உருவாக்கப்படுகின்றன.

global system for mobile communications: நடமாடும் தகவல் தொடர்புக்கான உலகளாவிய முறைமை: பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட நாடுகளில் நடைமுறையிலுள்ள இலக்கமுறை செல்பேசிக்கான தரவரையறை.தலைப்பெழுத்துச் சுருக்கமாக, ஜிஎஸ்எம்(GSM)என்று அழைக்கப்படுகிறன. ஜிஎஸ்எம் தகவல் தொடர்பு அமைப்புகள் பரிசோதனை முறையில் அமெரிக்க நாட்டிலும் நிறுவப்பட்டுள்ளது.

global universal identification: பரந்த உலகளாவிய அடையாளம்:ஒரு குறிப்பிட்ட இனப்பொருளுக்கு ஒரேயொரு பெயரைச் சூட்டும் அடையாளத் திட்டம்.வேறுவேறான பணித்தளங்களிலும் பயன்பாடுகளிலும் இப்பெயர் அடையாளங்காணப்படும்.