பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Gopherspace

207

.gq


Gopherspace:கோஃபர்வெளி: இணையத்தின் தொடக்ககால கட்டங்களில் கோஃபர்வெளி (Gopherspace)என்பது செல்வாக்குப் பெற்று விளங்கியது.இணையத்திலுள்ள தகவல் களஞ்சியங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து தலைப்பு வாரியாக அட்டவணையிட்டு வழங்கன் கணினிகளில் சேமித்து வைத்திருப்பர். இந்தக் கோஃபர் கணினியை அணுகும் ஒருவர் தமக்கு வேண்டிய தகவல் இருக்கும் இடமறிந்து தேடிப் பெறமுடியும்.வைய விரிவலையின் (www) வருகைக்குப் பின் கோஃபர்வெளி செல்வாக்கு இழந்துவிட்டது.

GOSIP:காலிப்: அரசு திறந்தநிலை முறைமைகளின் பிணைப்புகளுக்கான குறிப்புரை என்று பொருள்படும் Government Open Systems Interconnection Profile group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்(GOSIP).அமெரிக்க ஐக்கிய நாடு அரசு 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் ஓர் ஆணை பிறப்பித்தது.அரசுக்காக வாங்கப்படும் புதிய கணினிப் பிணையங்கள் ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ தரக்கட்டுப்பாடுள்ளவையாய் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட ஆணையையே காஸிப் குறிக்கிறது.ஆனால் இவ்வழிகாட்டுநெறி,முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.எனவே போசிட் (POSIT) என்னும் புதிய நெறியை உருவாக்கியது.

go to:அங்கு செல்.

go to page:செல்லும் பக்கம்.

go to statement:கோ டூ கூற்று;'அங்கு செல்'ஆணை ஒரு நிரலிலுள்ள ஆணைகளை கணினி வரிசையாக நிறைவேற்றுகிறது. அவ்வாறின்றி நிரல் இயக்கத்தின் போது ஒரு கட்டத்தில் நிரலின் ஒரு குறிப்பிட்ட வரிக்குத் தாவ வேண்டுமெனில் இக்கட்டளையைப் பயன்படுத்த வேண்டும்.நுண்செயலி மொழியில் கிளைபிரி (Branch),தாவல்(Jump)ஆணையாக இருந்தது. உயர்நிலை கணினி மொழிகளில் அங்கு செல் (GoTo) என்று மாறியது.பேசிக்,பாஸ்கல்,சி,சி++ போன்ற பல்வேறு மொழிகளில் இக்கட்டளை பயன்படுத்தப்படுகிறது.பொதுவாக, இக்கட்டளையைப் பயன்படுத்த வேண்டாம் என்றே நிரலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.காரணம், நிரலின் தருக்கமுறை ஓட்டத்தைப் புரிந்துகொள்ள நிரலருக்கும் கடினம்;மொழிமாற்றி(Compiler)யும் சிக்கலான வேலையைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

.gov:கவ், ஜிஓவி:அரசுத் துறையின் இணையதளங்களை அடையாளம் காணப்பயன்படுத்தப்படும் பெருங்களப்பெயர். இணையக் களப்பெயர் முறைமையில் இடம்பெற்றுள்ள ஏழு முதன்மைக்களப் பெயர்களில் (.com,.org,.net,.edu,.mil.int,.gov)ஒன்று. அமெரிக்காவில் இராணுவம் அல்லாத கூட்டரசின் முகமைகள் இப்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அமெரிக்காவின் மாநில அரசுகள் states.us என்னும் மேல்நிலைக்களப் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.us என்ற சொல்லுக்கு முன் அந்தந்த மாநிலத்தைக் குறிக்கும் ஈரெழுத்துச் சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாம்.

.gov.ca:ஜிஓவி.சிஏ:ஓர் இணையதள முகவரி.கனடா நாட்டு அரசாங்கத்துக்குரியது என்பதைக் குறிக்கும் பெருங்களப்பெயர்.

.gq:ஜிகியூ:ஓர் இணையதள முகவரி பூமத்திய கினியா நாட்டைச்