பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

GREP

210

group bsnd


முன்பு ஜூலியன் காலண்டர் பின்பற்றப்பட்டு வந்தது.1582இல் பதின்மூன்றாம் போப் கிரிகோரி புதிய காலக்கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார்.அதுவே கிரிகோரியன் காலண்டர் எனப்படுகிறது.இது,முந்தைய முறையைவிட மிகத்துல்லியமான முறையாகும். ஓர் ஆண்டுக்கு 365.2422 நாட்கள் என மிகத்துல்லியமாகக் கணக்கிடப்பட்டது.இதன்படி நூறால் வகுபடும் ஓர் ஆண்டு நானூறாலும் வகுபட்டால் மட்டுமே நீள்(Leap)ஆண்டாகும். அதாவது 366 நாட்களைக் கொண்டதாகும். இதன்படி,2000 ஒரு நீள் ஆண்டு.ஆனால் 1900 ஒரு நீள் ஆண்டில்லை.கி.பி.1-ம் ஆண்டிலிருந்து கூடுதலாகக் கணக்கிடப்பட்ட 10 நாட்கள் 1582 அக்டோபர் மாதத்தில் கழிக்கப்பட்டன.ஆனாலும் இங்கிலாந்தும் அதன் காலனிகளும் புதிய காலண்டரை ஏற்றுக்கொள்ளவில்லை.1752ஆம் ஆண்டில்தான் அவை கிரிகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டன.1952 செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் கழிக்கப்பட்டன.

GREP1:கிரெப்: முழுதளாவிய இயல்பான சொல்லமைப்பைத் தேடிக்காட்டல் என்று பொருள்படும் Global Regular Expression Print என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கோப்பில் அல்லது கோப்புகளில் ஒருகுறிப்பிட்ட சொல்லைத் தேடிக்காணும் யூனிக்ஸ் கட்டனை.

GREP2:கிரெப்2: யூனிக்ஸின் கிரெப் கட்டளையைப் பயன்படுத்தி ஒர் உரைப்பகுதியைத் தேடும் முறை.

grid layout:கட்ட உருவரை.

grok:கிராக்:ஆழமாய்,தீர்க்கமாய் புரிந்துகொள்ளல். திரு.ராபர்ட் ஏ.ஹெய்ன்லெய்ன் எழுதிய அறியாத நாட்டில் தெரியாத ஆள் (Stranger in a Strange Land)என்ற புதினத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.அருந்துதல் என்று பொருள்படும் மார்சியன் மொழிச் சொல்லும் ஆகும்.பாலை நிலத்துவாசி நீரின்மீது கொள்ளும் அக்கறையைப் போன்று முனைப்பு ஆர்வத்தைக் குறிக்க மார்சியன் மொழியில் இச்சொல் பயன்படுகிறது.இணையக் கலந்துரையாடல்களில் கணினிப் புலமையைக் குறிக்க குறும்பர்கள் (Hackers)இச்சொல்லைப் பயன்படுத்துவர்.

groove format:வரிப்பள்ள வடிவம்.

ground:தரைத் தொடர்பு:ஒரு மின்சுற்றிலிருந்து பூமிக்கு இணைப்பு ஏற்படுத்தும் பாதை அல்லது தொடுகின்ற உடலோடு ஏற்படுத்தும் தொடர்பு.பொதுவாக,ஒரு பாதுகாப்புச் சாதனமாக இது பயன்படுகிறது.

group:குழு:1.பல உறுப்புகள் இணைந்த ஒரு முழுமை.ஒரு தரவுத்தள அறிக்கையில் குறிப்பிட்ட ஏடுகளின் தொகுதி.2.ஒரு படவரைவு மென்பொருளில் வரைகின்ற ஒரு படத்தில் பல்வேறு உருப்பொருள்களை ஒரு தொகுதியாகச் சேர்ப்பதையும் குழு என்பர்.3.பல் பயனாளர் இயக்கமுறைமையில் சில குறிப்பிட்ட பயனாளர்களை இணைத்து ஒரு குழுவை உருவாக்க முடியும்.சலுகைகளையும் உரிமைகளையும் ஒரு குழுவுக்கென வரையறுக்க முடியும்.அக்குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் அந்தச் சலுகைகளையும் உரிமைகளையும் பெறுவர்.

group band:குழுப் பட்டை.