பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

access denied

20

access storage device, direct


பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பட்டியல்.

access denied : அணுகல் மறுப்பு.

access event : அணுகல் நிகழ்ச்சி. அணுகு நிகழ்வு

access hole : அணுகு துளை.

access, immediate : உடனடி அணுகல்.

access level : அணுகு மட்டம்; அணுகு நிலை.

access mask : அணுகல் மறைப்பி.

access memory, random : குறிப்பின்றி அணுகு நினைவகம்.

access mode : அணுகு பாங்கு

access number : அணுகு எண் : இணையத்திலுள்ள ஒரு சேவையை அணுகுவதற்கு சந்தாதாரர் பயன் படுத்தும் தொலைபேசி எண்.

access path : அணுகு பாதை: அணுகு வழி : ஒரு கோப்பின் இருப்பிடத்தைக் கண்டறிய, இயக்க முறைமை (operating system) பின்பற்றிச் செல்லும் பாதை. அணுகுபாதை ஒரு இயக்ககம் அல்லது வட்டுத் தொகுதி (disk volume) பெயருடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து கோப்பகம் மற்றும் உள்கோப்பகங்களின் பெயர்கள் தொடர்ச்சியாக இடம் பெறும் (அவ்வாறு இருப்பின்). இறுதியில் கோப்பின் பெயர் இருக்கும். (எ.டு): C:\WINDOWS\ SYSTEM\abc.dll

access points : அணுகு முனைகள்; இயக்க முனைகள்.

access privileges : அணுகு சலுகைகள்: ஒரு பிணையத்தில் அல்லது ஒரு கோப்பு வழங்கனில் சேமிக்கப்பட்டுள்ள தகவல் வளங்களைக் கையாள்வதற்கு ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள். வழங்கன் கணினியை அணுகுதல், ஒரு கோப்பகத்தின் உள்ளடக்கத்தைப் பார்வை யிடல், ஒரு கோப்பினைத் திறந்து பார்த்தல், அதனைப் பிறருக்கு அனுப்புதல், ஒரு கோப்பினை அல்லது கோப்பகத்தை உருவாக்குதல், திருத்தியமைத்தல், அழித்தல் போன்ற செயல்பாடுகள் இந்தச் சலுகைகளில் அடங்கும். முறைமை நிர்வாகி ஒரு பயனாளருக்கு இச்சலுகைகளை வழங்கலாம் அல்லது மறுக்கலாம். நிர்வாகிக்கு இத்தகைய உரிமை இருப்பதால் தகவல் பாதுகாக்கப்படுகிறது; இரகசியத் தகவலின் மறைதன்மை காப்பாற்றப் படுகிறது. வட்டிலுள்ள சேமிப்பிடங்கள் போன்ற வளங்களை முறைப்படி பிரித்தளிக்க முடிகிறது.

access provider : அணுகள் வழங்கி.

access, random : குறிப்பின்றி அணுகல்.

access rights : அணுகு உரிமைகள் : ஒரு கோப்பு அல்லது கோப்பகம் அல்லது ஒரு முறைமையைப் பார்க்க, உள்நுழைய அல்லது மாற்றம் செய்வதற்கான அனுமதி.

access, serial : தொடரியல் அணுகல்.

access series : அணுகு தொடர்.

access specifier : அணுகல் வரையறுப்பி.

access storage device, direct : நேரடி அணுகு களஞ்சியக் கருவி; நேரடி அணுகு சேமிப்பக சாதனம்.