பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

history list

218

home page


ஒன்றாய்க் கடந்துவரும் பட்டித் தேர்வுகள் (menu options).3.இணைய உலாவியில் அடுத்தடுத்து தொடர்ந்து வந்த தொடுப்புகள் (links).

history list:வரலாற்றுப் பட்டியல்.

history settings:வரலாற்று அமைப்புகள்.

.hk:.ஹெச்கே:ஓர் இணையதள முகவரி ஹாங்காங்கைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

H KEY ஹெச் விசை:கையாள் விசை எனப் பொருள்படும் Handle Key என்பதன் சுருக்கச் சொல்.

.hn:.ஹெச்என்:ஓர் இணையதளம் ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவு களப்பெயர்.

hold:பிடித்திரு.

Hollerith tabulating/recording machine: ஹோலரித் அட்டவணையிடும்/பதிவுசெய்யும் எந்திரம்:1800களின் பிற்பகுதியில் ஹெர்மன் ஹோலரித் கண்டுபிடித்த மின் எந்திரப்பொறி. குறிப்பிட்ட இடங்களில் துளையிடப்பட்ட அட்டைகளில் பதியப்பட்ட தகவல்களைச் செயலாக்கும் எந்திரம்.துளைகளின் மூலமாக மின்சுற்று நிறைவடைந்து சமிக்கைகள் உருவாக்கப்பட்டு எண்ணுகின்ற மற்றும் அட்டவணையிடும் எந்திரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இந்த எந்திரம் 1890-ஆம் ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை மூன்றில் இரண்டு பங்கு குறைத்தது.பின்னாளில் ஹோலரித்,டேபுலேட்டிங் மெஷின் கம்பெனியைத் தொடங்கினார்.1911ஆம் ஆண்டு இந்தக் குழுமம் இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ்(IBM) என்னும் புகழ்பெற்ற நிறுவனமாக உருவெடுத்தது.

holes,procket வழிப்படுத்து துளைகள்.

holy war:புனிதப் போர்:1.கணினித் துறையில் ஒரு குறிப்பிட்ட கருத்துரு அல்லது கோட்பாடு பற்றி கணினி வல்லுநர்களிடையே பரவலாக நடைபெறும் கசப்பான விவாதம்.(எ-டு) நிரலாக்க மொழிகளில் பயன்படும் goto கட்டளை பற்றியது அல்லது எண்களை இரும எண் முறையில்(Binary format) சிறு முடிவன்/பெரு முடிவன் முறையில் பதியும் முறை பற்றியது.2. அஞ்சல் பட்டியல்,செய்திக்குழு மற்றும் ஏனைய நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் உணர்வுபூர்வமான சர்ச்சைக்கிடமான பொருள்பற்றி நடைபெறும் விவாதம்.(எ-டு) பாபர் மசூதி,வட அயர்லாந்து,கருக்கலைப்பு,கருணைக் கொலை போன்றவை.எடுத்துக் கொண்ட தலைப்புக்குப்புறம்பாகப் புனிதப் போருக்கு வழிவகுக்குமாறு கருத்துகளை முன்வைப்பது இணைய நாகரிகத்துக்கு (Netiguette) எதிரானது.

home office:இல்ல அலுவலகம்:வீட்டு அலுவலகம்:1.வீட்டிலேயே அமைத்துக் கொள்ளும் அலுவலகம்.2.ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம்.3.ஓர் அலுவலகத்துக்குத் தேவையான அனைத்துவகை வசதிகளும் உள்ளடங்கிய கணினியைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுகிறது.

home page:முகப்புப் பக்கம்:1.வைய விரிவலையில் (World Wide