பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

home server

219

host timed out


Web)ஒரு மீவுரை(hypertext) முறைமையில் தொடக்கப்பக்கமாக அமைக்கப்படும் ஓர் ஆவணம். 2.மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தொடக்கப்பக்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.3. ஒரு வலைத்தளத்தில் நுழையும் போது காட்சியளிக்கும் முதல் பக்கம்.

home server:முதன்மை வழங்கன்.

homogeneous:ஒரு படித்தான;ஒரு முகப்பட்ட.

homogeneous environment:ஒரு படித்தான சூழல்:ஒரு நிறுவனத்துக்குள் ஒரே தயாரிப்பாளரின் வன்பொருளையும் ஒரே தயாரிப்பாளரின் மென்பொருள்களையும் பயன்படுத்துகின்ற ஒரு மென்பொருளாக்கச்சூழல்.

homogeneous network:ஒரு படித்தானபிணையம்:அனைத்து வழங்கன் கணினிகளும் ஒன்றுபோல இருந்து,ஒரேயொரு நெறிமுறையில் (protocol) இயங்குகின்ற கணினிப் பிணையம்.

hopper:தத்தி.

hopper,card:அட்டைத் தத்தி.

horizontal feed:கிடைமட்ட ஊட்டு.

horizontal frequency:கிடைமட்ட அலைவரிசை.

horizontal market software:கிடைமட்டச் சந்தை மென்பொருள்:அனைத்து வகையான தொழில்,வணிக நடைவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய சொல்செயலி (Word Processor)போன்ற பயன்பாட்டு நிரல்கள். வேறுசில மென்பொருள்கள் குறிப்பிட்ட தொழில் துறைக்கு மட்டுமே பயன்படும்படி தயாரிக்கப்படுகின்றன.

horizontal retrace:கிடைமட்ட பின்வாங்கல்:பரவல் வருடு ஒளிக்காட்சி திரைக்காட்சியில் ஒரு வருடுவரியின் வலது ஓரத்திலிருந்து அடுத்த வரியின் இடப்புற ஓரம்வரை(வரியின் தொடக்கம்வரை)மின்னணு ஒளிக்கற்றை நகர்வது.

horizontal scan rate:கிடைமட்ட வருடி வேகம்.

horizontal synchronization:கிடைமட்ட ஒத்திசைவு:பரவல் திரைக்காட்சி(Raster display)முறையில் மின்னணுக்கற்றை இடப்புறமிருந்து வலப்புறம்,மறுபடி வலப்புறமிருந்து இடப்புறம் நகர்ந்து வரிவரியாக ஓர் உருத்தோற்றத்தை உருவாக்குவதில் பின்பற்றப்படும் நேரக்கட்டுப்பாடு.கோணம் நிலைத்த மடக்கி(phase locked loop)எனப்படும் மின்சுற்று கிடைமட்ட ஒத்திசைவு சமிக்கையைக் கட்டுப்படுத்துகிறது.

host name:புரவன் பெயர்;புரவலர் பெயர்: ஓம்புநர் பெயர்:இணையத்திற்குள் இயங்கும் ஒரு குறிப்பிட்ட பிணையத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வழங்கன் கணினியின்(Server)பெயர்.ஓர் இணையதள முகவரியிலுள்ள சொற்களில் இடக்கோடியில் உள்ள பெயர் பெரும்பாலும் அத்தளத்துக்குரிய புரவன் கணினிப் பெயராய் இருக்கும்.(எ-டு)chn.vsnl.net.in என்ற முகவரியில் chn என்பது,விஎஸ்என்எல் நிறுவனத்துப் புரவன் கணினிப் பெயர்.

host timed out:புரவன் நேரக்கடப்பு;ஒரு டீசிபி/ஐபி (TCP/IP) பிணைய இணைப்பில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்போது,ஒரு குறிப்பிட்ட நேர எல்லைக்குள்(சில