பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

host unreachable

220

hot wired


நிமிடங்கள்)தொலைநிலைப் புரவன் கணினி பதிலிறுக்கத் தவறுகையில் ஏற்படும் பிழைநிலை. இந்நிலை பல்வேறு காரணங்களினால் ஏற்படலாம். புரவன் கணினி செயலிழந்து போவதால் அல்லது பிணையத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதால் ஏற்படலாம்.ஆனால் பயனாளருக்குக் கிடைக்கும் பிழைசுட்டும் செய்தி,பிழைநிலைக் காரணத்தைத் துல்லியமாகச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியாது.

host unreachable:புரவன் எட்டாநிலை:ஒரு டீசிபி/ஐபி(TCP/IP)பிணைய இணைப்பில் பயனாளர் அணுக விரும்பும் குறிப்பிட்ட புரவன் கணினியுடன் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள முடியாதபோது நிகழும் பிழைநிலை. பிணையத்திலிருந்து துணிக்கப்பட்டதாலோ, செயலிழப்பின் காரணமாகவோ இந்நிலை ஏற்படலாம்.பிழைசுட்டும் செய்தி,காரணத்தை துல்லியமாகத் தெரிவிக்கலாம்,தெரிவிக்காமலும் போகலாம்.

hot:சூடான:தனிச்சிறப்பான,அவசர ஆர்வமூட்டும்,மிகவும் புகழ்பெற்ற,

hot docking:சூடான இணைப்பு;நடமாடும் இணைப்பு:பயணம் செய்துகொண்டிருக்கும்போதே ஒரு மடிக்கணினியை வேறொரு தலைமைக் கணினியுடன் பிணைய முறையில் இணைத்துக்கொள்ளல்.அவ்வாறு இணைத்துக்கொண்டு தலைமைக் கணினியில் ஒளிக்காட்சி,திரைக்காட்சி மற்றும் ஏனைய பணிகளையும் இயக்குதல்.

hot insertion:சூடாய்ச் செருகல்:ஒரு கணினி அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போதே ஒரு புறச்சாதனத்தை அல்லது விரிவாக்க அட்டைகளைச் செருகுதல்.தற்காலத்திய புதிய மடிக்கணினியில் பீசிஎம்சிஐஏ கார்டுகளை இவ்வாறு செருக முடியும்.உயர்நிலை வழங்கன் கணினிகளும்(servers)இத்தகைய செருகலை அனுமதிக்கின்றன.இதனால் இயங்காநேரம் குறைகிறது.

Hot Java:ஹாட்ஜாவா:சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஓர் இணைய உலாவி.வலைப்பக்கங்களில் உள்ளுறையும் ஜாவா பயன்பாடுகள் மற்றும் குறுநிரல்களை(applets)இயக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உலாவி.

hotlist:சூடான பட்டியல்:பயனாளர் ஓர் இணைய உலாவி மூலம் அடிக்கடி பார்வையிடும் வலைப்பக்கங்களின் முகவரித் தொகுப்பு. பட்டியலிலிருந்து பயனாளர் விரும்பும் பக்கத்தை ஒரேசொடுக்கில் அணுகமுடியும்.இத்தகைய பட்டியல் நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் மற்றும் லின்ஸ்க்கில் புத்தகக் குறி(Book mark)எனவும், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் விருப்பத்தளக் கோப்புறை(Favourites Folder)எனவும் வழங்கப்படுகிறது.

hot plugging:சூடான இணைப்பு:இயங்கிக் கொண்டிருக்கும்போதே ஒரு பொறியில் இன்னொரு புறச்சாதனத்தை இணைத்தல். கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போதே ஒரு விரிவாக்க அட்டை அல்லது இணக்கி,அச்சுப்பொறி போன்ற புறச்சாதனத்தைப் பொருத்துதல்.

hot wired:ஹாட் ஒயர்டு:ஒயர்டு இதழின் வலைத்தளம்.இணையப்