பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

HPFS

221

.htm


பண்பாடு குறித்த கிசுசிசுக்கள் மற்றும் பிறதகவல்கள் அடங்கிய தளம் முகவரி: http://www.hotwired.com/frontolood.

HPFS:ஹெச்பிஎஃப்எஸ்: உயர் செயல்திறன் கோப்பு முறைமை என்று பொருள்படும் High Performance File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒஎஸ்/2 இயக்க முறைமையின் 1.2 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இருக்கும் கோப்பு முறைமை.

HPGL:ஹெச்பீஜிஎல்:ஹீவ்லெட்பேக்கார்டு வரைகலை மொழி எனப்பொருள்படும் Hewelet Packard Graphics Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.வரைவுபொறிகளில் (Plotters) படிமங்களை அச்சிடுவதற்காக உருவாக்கப்பட்ட மொழி.ஒரு ஹெச்பீஜிஎல் கோப்பு,ஒரு வரைகலைப் படிமத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான ஆணைகளையும் கொண்டிருக்கும்.

HPIB:ஹெச்பீஐபி:ஹுவ்லெட்பேக்கார்டு இடைமுகப்பாட்டை என்றுபொருள்படும் Hewlelt-Packard Interface Bus stairp Glgirl flair தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

HP/UXorHP-UX:ஹெச்பீ/யுஎக்ஸ் அல்லது ஹெச்பபீ-யுஎக்ஸ்:ஹீவ்லெட்-பேக்கார்டு யூனிக்ஸ் என்று பொருள்படும்Hewlett Packard UNIX என்ற தொடரின் சுருக்கம்.யூனிக்ஸ் இயக்க முறைமையின் ஒரு வடிவம்.குறிப்பாக,ஹீவ்லெட் பேக்கார்டின் பணிநிலையக் கணினிகளில் இயக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.

.hqx:.ஹெச்கியூஎக்ஸ்:பின்ஹெக்ஸ் (BinHex) எண்முறையில் குறிமுறைப்படுத்தப்பட்ட கோப்பின் வகைப்பெயர்(Extension).

.hr:.ஹெச்ஆர்:ஓர் இணையதளம் குரோசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

HREF:ஹெச்ரெஃப்:மீவுரை மேற்குறிப்பு என்று பொருள்படும் Hypertext Reference என்ற தொடரின் சுருக்கச் சொல்.ஒரு ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறிசொல் (tag).இணையத்திலிருக்கும் இன்னோர் ஆவணத்தைச் சுட்டும் தொடுப்பு.

HSB:ஹெச்எஸ்பி:நிறப் பூரிதம்-ஒளிர்மை (பிரகாசம்)என்று பொருள்படும்(Hue-Saturation Brightness)என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.சக்கரவடிவில் அமைந்த ஒருநிறமாலை அமைப்பு.0° என்பது சிவப்பு;60°-மஞ்சள்;120°-பச்சை;180°-வெளிர்நீலம்;240-நீலம்;300-செந்நீலம்,வெண்மை நிறத்தின் விழுக்காடு அளவு பூரிதத்தைக் குறிக்கிறது.

HSV:ஹெச்எஸ்வி:நிறப்பூரித மதிப்பு எனப் பொருள்படும் Hue Satuaration Value என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

.ht:.ஹெச்டி: ஓர் இணையதள முகவரி ஹைத்தி தீவைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.htm:.ஹெச்டிஎம்:வலைப்பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் மொழியின்(HTML)கோப்புகளை அடையாளம் காட்டும் எம்எஸ்-டாஸ்/விண்டோஸ் 3.எக்ஸ் கோப்புவகைப் பெயர்.