பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.html

222

.hu


எம்எஸ்-டாஸ் மற்றும் விண்டோஸ் 3.எக்ஸ் ஆகியவை மூன்றெழுத்து வகைப்பெயர்களையே புரிந்து கொள்ளும் என்பதால் .html என்னும் நான்கெழுத்து வகைப்பெயர் மூன்றெழுத்தாகக் குறுக்கப்பட்டு விடுகிறது.

.html:.ஹெச்டிஎம்எல்: வலைப்பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் மொழியின் (HTML) கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

HTML document:ஹெச்டீஎம்எல் ஆவணம்.

HTML editor:ஹெச்டிஎம்எல் உரைத் தொகுப்பி.

HTTP:ஹெச்டிடிபீ:மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.வையவிரிவலையில் தகவலைப் பெறுவதற்குப் பயன்படும் கிளையன்/வழங்கன் (Clienti/Server) நெறிமுறை ஆகும்.

HTTPD:ஹெச்டீடீபீடி:மீவுரை பரிமாற்ற நெறிமுறை ஆவியுரு எனப்பொருள்படும் Hypertext Transfer Protocol Daemon என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு சிறிய வேகம்மிக்க ஹெச்டீடீபீ வழங்கன் (server) கணினி.இது என்சிஎஸ்ஏ நிறுவனத்தின் இலவசச் சேவையகம்.

HTTPS:ஹெச்டீடீபீஎஸ்:விண்டோஸ் என்டியில் வலை வழங்கனாகச் செயல்படும் மென்பொருள். ஐரோப்பிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்டி அகாடெமி சென்டர்(EMWAC)ஸ்காட்லாந்து நாட்டு எடின்பரோ பல்கலைக் கழகத்தில் உருவாக்கியது. இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.வெய்ஸ்(WAIS)எனப்படும் தேடு திறனைக் கொண்டது.

HTTP server:ஹெச்டீடீபீ வழங்கன்:1. இணைய உலாவியான கிளையன் மென்பொருளின் கோரிக்கையை ஏற்று ஹெடீஎம்எல் ஆவணங்களையும் தொடர்புடைய கோப்புகளையும் ஹெச்டீடீபீ நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பிவைக்கும் வழங்கன் மென்பொருள்.கேட்கப்பட்ட ஆவணம் அல்லது கோப்பு வழங்கப்பட்டவுடன் கிளையனுக்கும் வழங்கனுக்கும் இடையே உள்ள தொடர்பு முறிந்துவிடும்.வையவலை மற்றும் இணையதளங்களில் ஹெச்டீடீபீ வழங்கன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

HTTP status codes:ஹெச்டீடீபீ நிலைமைக் குறியெண்கள்:தகவல் பெறுவதற்கான கோரிக்கையின் விடைகுறித்து ஹெச்டிடிபீ வழங்கன்(server)அனுப்பிவைக்கும் மூன்றிலக்கக் குறியெண்.குறியெண் 1இல் தொடங்கினால், கிளையன் கணினி தான் அனுப்பும் விவரங்களை இன்னும் அனுப்பி முடிக்கவில்லை என்றும்,2-எனில் வெற்றிகரமான விடை என்றும்,3 எனில் கிளையன் இனி,மேல் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது என்றும்,4 எனில் கிளையன் பிழை காரணமாய் விடைபெறும் முயற்சி தோற்றது என்றும்,5 எனில் வழங்கன் பிழை காரணமாய்த் தோற்றது என்றும் பொருள்.

.hu:.ஹெச்ய:ஓர் இணையதளம் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தது என்