பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hub,remote access

223

hyper text transmission protocol


பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

hub, remote access:சேய்மை குவியம் : தொலை அணுகு குவியம்.

huffmann tree:ஹஃப்மன் மரவுரு.

human-machine interface:மனிதன் பொறி இடைமுகம்.

human mind model:மனித அறிவு மாதிரியம்.

humanware:மனிதப் பொருள்

hybrid circuit:கலப்பு மின்சுற்று: அடிப்படையிலேயே முற்றிலும் வேறுபாடான உறுப்புகளைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான பணியைச் செய்தல்,வெற்றிடக் குழாய்கள்(Vacuum tubes)மற்றும் மின்மப் பெருக்கிகளை (Transisters)பயன்படுத்தி உருவாக்கப்படும் தொகுப்பிசை பெருக்கிகளை (Stereo amplifier) எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

hybrid computer:கலப்பினக் கணினி: இலக்கமுறை (Digital) மற்றும் தொடர்முறை (analog) மின்சுற்றுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி

hyperlink:மீத்தொடுப்பு:ஒரு மீவுரை ஆவணத்திலுள்ள ஒரு சொல்,ஒரு சொல் தொடர். ஒரு குறியீடு அல்லது ஒரு படிமம் ஓர் உறுப்புக்கும்,அதே ஆவணத்திலுள்ள வேறோர் உறுப்பு அல்லது வேறொரு மீவுரை ஆவணம் அல்லது வேறொரு கோப்பு அல்லது உரைநிரல் (Script) இவற்றுள் ஏதேனும் ஒன்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு.இத்தகைய தொடுப்புகள் பெரும்பாலும் நீல நிற எழுத்துகளில்(ஆவண எழுத்து நிறத்திலிருந்து மாறுபட்ட நிறத்தில்) அடிக்கோடிடப்பட்டிருக்கும்.சுட்டிக் குறியை அருகில் கொண்டு சென்றால் கை அடையாளமாக மாறும். இந்த அடையாளங்களைக் கொண்டு அது ஒரு மீத்தொடுப்பு என்பதை அறியலாம்.சுட்டியைக் கொண்டு தொடுப்பின்மீது சொடுக்கியதும், தொடுப்பில் சுட்டப்பட்டுள்ள ஆவணம் திறக்கும். எஸ்ஜிஎம்எல்,ஹெச்டிஎம்எல் போன்ற மீவுரைக் குறிமொழிகளில் உருவாக்கப்படும் மீவுரை ஆவணங்களில்,பல்வேறு வகையான குறிசொல்கள்(tags) கொண்டு மீத்டுப்புகளைக் குறிப்பிடுகின்றன.

hyperspace:மீவெளி:வைய விரிவலையில் (WWW)மீத்தொடுப்புகளின்(Hyperlinks) மூலம் அணுகும்படியான மீவுரை ஆவணங்கள் அனைத்தின் தொகுப்பு.

hyphenation programme:சொல் ஒட்டு நிரல்; சொல்வெட்டு நிரல்:பெரும்பாலும் சொல்செயலிப் பயன்பாடுகளில் சேர்க்கப்படும் ஒரு நிரல்.ஒவ்வொரு வரி முடிவிலும் இடம் போதாத சொற்களை இருகூறாக்கி இறுதியில் ஓர் ஒட்டுக்குறியைச் சேர்க்கும் வசதி விருப்பத் தேர்வாக இருக்கும்.ஒரு நல்ல சொல்லொட்டு நிரல்,ஒரு பத்தியில்,தொடர்ச்சியாக மூன்று வரிகளுக்கு மேல் வரி இறுதியில் சொற்களைப் பிரிக்காது.அப்படித் தேவைப்படின் பயனாளருக்குத் தெரிவித்து அவரின் ஒப்புதலின் பேரில் முடிவு செய்யும்.

hyper terminal:ஹைப்பர் டெர்மினல் : ஒரு மென்பொருள்.

hyper text transmission protocol HTTP: மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை.