பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IEEE

227

if statement



நிறுவனத்துக்குள் கணினி அமைப்புகள், பிணையங்கள் உட்பட தகவல் செயலாக்க அமைப்புகளை உருவாக்கி பராமரிப்பதற்கான வழி முறை. 2. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணைய உலாவி மென்பொருளான இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பெயர்ச் சுருக்கம்.

IEEE 488 : ஐஇஇஇ 488 : பொதுப்பயன் இடைமுகப் பாட்டை (General Purpose Interface Bus - GPIB) -யின் மின்சார வரையறை. பாட்டையின் தகவல் மற்றும் கட்டுப்பாட்டுத் தடங்களையும் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட அளவுகளையும் குறிப்பிடுகிறது.

IEPG : ஐஇபீஜி: இணையப் பொறியியல் மற்றும் திட்டக் குழு என்று பொருள்படும் Internet Engineering and Planning Group groupஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தின் செல்வாக்கை வளர்த்தெடுப்பது, அதன் தொழில்நுட்ப முனைவுகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இணையப் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குழு.

IESG : ஐஇஎஸ்ஜி : இணையப் பொறியியல் நெறிப்படுத்துங் குழு எனப் பொருள்படும் Internet Engineering Steering Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர்.

IETF ஐஇடிஎஃப் : இணையப் பொறியியல் முனைப்புக் குழு என்னும் பொருள்தரும் Internet Engineering Task Force என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களை ஆய்வு செய்து அவற்றுக்கான தீர்வுகளை ஐஏபி-க்குப் பரிந்துரை செய்யும் பொறுப்பினை இவ் வமைப்பு வகிக்கிறது. ஐஇஎஸ்ஜி இந்த அமைப் பினை மேலாண்மை செய்கிறது.

iff . ஐஎஃப்எஃப் (இஃப்) : ஒரு கோப்பு, மாறுகொள் கோப்பு வடிவாக்கத்தில் (Interchange File Format) உள்ளது என்பதைக் குறிக்கும் கோப்பு வகைப்பெயர் (File extension). அமிகா பணித்தளத்தில் இது மிகப் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது. எவ்வகை தகவல்களைக் கொண்டதாகவும் அக்கோப்பு இருக்க முடியும். வேறு பணித்தளங் களில் பெரும்பாலும் படிமம் (image) மற்றும் ஒலி (sound) கோப்புகளுக்கான வகைப்பெயராகவே இது பயன்படுத்தப்படுகிறது.

IFF: ஐஎஃப்எஃப் : பரிமாற்றக் கோப்பு வடிவாக்கம் என்ற பொருள்படும் Interchange File Format என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

if statement : if கட்டளை; if கூற்று : ஒரு பூலியன் தொடரின் விடை மெய் (அல்லது சரி) என்ற நிலையில், நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைத் தொகுதியை நிறைவேற்றப் பயன்படும் கட்டளையமைப்பு. பெரும் பாலான நிரலாக்க மொழிகளில்IF-உடன் ELSE-என்னும் துணைப் பிரிவும் பயன்படுத்தப்படுகிறது. அப் பூலியன் தொடர் பொய் (அல்லது தவறு) என்ற நிலையில் நிறைவேற்றப் படவேண்டிய கட்டளைத் தொகுதி ELSE பகுதியில் குறிப்பிடப்படுகிறது.

(எ-டு) if (n>10)

      {a+=100;

b=1*c+200;