பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IMAP4

230

in-band signalling


imaging system :உருத் தோற்ற முறைமை; படிமமாக்க முறைமை,

IMAP4 : ஐமேப்4; இணையச் செய்தி அணுக்க நெறிமுறை-4 என்று பொருள்படும் Internet Message Access Protocol-4 என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐமேப்பின் அண்மைக்காலப் பதிப்பு. ஒரு அஞ்சல் வழங்கன் கணினியில் (mail server) மின்னஞ்சல் மற்றும் அறிக்கைப் பலகை செய்திகள் (Bulletin Board Message) சேமிக்கப்படுவதற்கான ஒரு வழி முறையே ஐமேப். பாப் (POP-Post Office Protocol) என்னும் இன்னொரு முறையும் பயன்பாட்டில் உள்ளது. ஐமேப் முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலிருந்து அஞ்சல்/ செய்திகளை மிகச் சிறப்பாக மீட்டெடுக்க முடியும். பாப் முறையில் இது இயல்வதில்லை.

IMHO : ஐஎம்ஹெச்ஓ ஐமோ : எனது தாழ்மையான கருத்தின்படி என்று பொருள்படும் In My Humble Opinion என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் நிகழ்நிலைக் கருத்தரங்குகளில் பயனாளர் ஒருவர் முன் வைக்கும் அவரின் சொந்தக் கருத்தினைக் குறிக்கும். ஒரு மெய்ம்மை அடிப் படையிலான கூற்றாக இருக்க வேண்டியதில்லை.

immediate operand : நேரடி மதிப்புரு: சில்லு மொழி ஆணையைச் செயல் படுத்துகையில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு மதிப்பு. ஆணையிலேயே அம்மதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு முகவரியின் மூலம் சுட்டப்படும் மதிப்பைக் குறிக்காது.

immediate printing : உடனடி அச்சிடல் : கணினியில் ஒர் உரைக் கோப்பினை அச்சுப்பொறிக்கு அனுப்புவதற்கு முன்பாக ஒர் அச்சுக் கோப்பாக சேமிக்கப்படுவதுண்டு. அல்லது இடைநிலையில் பக்க வடிவமைப்புச் செயல்முறை மேற் கொள்ளப்பட்டு அச்சுக்கு அனுப்பப்படுவதுண்டு. அவ்வாறில்லாமல் ஒர் உரையையும், அச்சிடுவதற்கான கட்டளைகளையும் நேரடியாக அச்சுப்பொறிக்கு அனுப்பும் முறைக்கு உடனடி அச்சிடல் என்று பெயர்.

IMO : ஐஎம்ஓ : என் கருத்தின்படி என்று பொருள்படும் In my opinion என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சலில், இணையச் செய்தி/விவாதக் குழுக்களில் பயன்படுத்தப்படும் சுருக்கச் சொல். தாம் குறிப்பிடுவது நிச்சயமான ஒரு மெய்ம்மையாக இருக்க வேண்டியதில்லை என்பதை அவரே ஒத்துக் கொள்ளும் ஒரு கூற்று.

impact print  : தொட்டச்சு.

impliment : செய்முறைப்படுத்து; செயலாக்கு.

importing class : இறக்குமதி இன குழு.

impulse : கண உந்துகை.

.in : இன்; ஐஎன் ; ஒர் இணைய தள முகவரி இந்திய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

in-band signalling : உள்-காற்றை சமிக்கை  : ஒரு தகவல் தொடர்புத் தடத்தில் பேச்சு அல்லது தகவலைக் கையாளும் அலைவரிசைக்குள் அனுப்பி வைக்கப்படும் சமிக்கை..