பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

information channel

232

infrared


(information),ஆட்டோபான்(Autobahn) ஆகிய இரு சொற்களும் இணைந்த கூட்டுச்சொல். இணையத்தை இச்சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஆட்டோபான் என்பது ஜெர்மன் நாட்டில் வாகன ஒட்டிகள் சட்டப்படி மிக வேகமாக வாகனத்தை ஒட்டிச் செல்வதற்கான நெடுஞ்சாலை ஆகும்.

information channel : தகவல் இணைப்பு:தகவல் தடம்:தகவல் அலைவரிசை.

information hiding:தகவல் மறைப்பு: பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு. ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தகவல் மறைக்கப்பட்டிருக்கும். அத்தகைய செயல்கூறுகள் குறிப்பிட்ட செயலாக்க முறையைச் சார்ந்து இருப்பதில்லை. ஒரு நிரல் கூறு அல்லது துணைநிரல் செயல்படும் முறையை அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் நிரல்களுக்குச் சார்பின்றி மாற்றியமைத்துக் கொள்ள தகவல் மறைப்பு கோட்பாடு உதவுகிறது.

information highway :தகவல் பெருவழி; தகவல் நெடுஞ்சாலை.

information management : தகவல் மேலாண்மை.

information storage :தகவல் சேமிப்பகம்:தகவல் களஞ்சியம்.

information storage and retrieval :தகவல் சேமிப்பும் மீட்பும்.

information super highway : தகவல் நீள் நெடுஞ்சாலை :தனியார் பிணையங்கள்,நிகழ் நிலைச்சேவைகள் மற்றும் இதுபோன்ற தகவல் போக்குவரத்தினை உள்ளடக்கிய ,தற்போதுள்ள இணையம் மற்றும் அதன் பொதுக் கட்டமைப்புகளையும் குறிப்பது.

information system, management :மேலாண்மை தகவல் முறைமை.

information technology act :மின் வெளிச் சட்டம்; தகவல் தொழில் நுட்பச் சட்டம்.

information technology manager : தகவல் தொழில்நுட்ப மேலாளர்.

information technology project manager : தகவல் தொழில்நுட்பத் திட்ட மேலாளர்.

information warehouse :தகவல் கிடங்கு: ஒரு நிறுவனத்தின் அனைத்துக் கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல் வளங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு.

information warfare :தகவல் போர்த்தாக்குதல் : எதிரி நாட்டின் பொருளாதார வாழ்வும் பாதுகாப்பும் பெரிதும் சார்ந்துள்ள கணினி நடவடிக்கைகள் மீதான தாக்குதல். விமானப் போக்கு வரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நிலைகுலையச் செய்தல், பங்குச் சந்தை ஆவணங்களை பெருமளவில் பாழாக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

infrared : அகச்சிவப்பு : மின்காந்த நிறமாலையில் சிவப்பு ஒளிக்குச் சற்றே கீழான வரம்புக்குள் ஒர் அலை வரிசையைக் கொண்டுள்ள கதிர். பொருட்கள் தத்தம் வெப்ப நிலைக்கேற்ப அகச்சிவப்புக் கதிர்களை வெளியிடுகின்றன. வழக்கமாக,