பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

initialization

234

inline graphics


களைக் கையாள இது ஏற்றதாகும். அடிப்படையான வரைகணித வடி வங்களை உள்ளடக்கியது. கணினி யுதவு வடிவமைப்பின் குறிக்கோள்களுக்கு இசைவானது. உரை விளக்க வரைபடங்கள், பொறியியல் வரை படங்கள் ஆகியவற்றுக்கு உகந்தது.

initialization : தொடக்கி வைத்தல்; தொடக்க மதிப்பிருத்தல்; தொடக்க நிலைப்படுத்தல் :ஒரு நிரலில் மாறிகளிலும், தரவுக் கோவைகளிலும் தொடக்க மதிப்புகளை இருத்தி வைக்கும் செயல்பாடு.

initialization list  : தொடக்க மதிப்பிருத்தும் பட்டியல்.

initialization portion : தொடங்கி வைக்கும் பகுதி.

initialization string : தொடங்கி வைக்கும் சரம் : ஒரு புறச்சாதனத்துக்கு, குறிப்பாக ஒர் இணக்கிக்கு அனுப்பி வைக்கப்படும் தொடர்ச்சியான கட்டளைகளின் தொகுப்பு. இணக்கியைச் செயல்பட வைக்கத் தயார்செய்யும் கட்டளைகள்; பெரும்பாலும் எழுத்துகளைக் கொண்ட சரமாக இருக்கும்.

initializer : தொடக்க மதிப்பிருத்தி : ஒரு மாறியின் தொடக்க மதிப்பாக அமையும் மதிப்பினை தரக்கூடிய கணக்கீட்டுத் தொடர்.

initial program load : தொடக்க நிரல் ஏற்றம்  :ஒரு கணினி இயக்கி வைக்கப்படும்போது, ஒர் இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றி எழுதிக் கொள்ளும் செயல்முறை.

initiate : தொடக்கிவை.

initiator : தொடக்கி  : ஸ்கஸ்ஸி(SCSI) இணைப்பிகளில் கட்டளைகள் தரக்கூடிய ஒரு சாதனம். கட்டளைகளைப் பெற்றுக் கொள்ளும் சாதனம் இலக்கு (Target) எனப்படுகிறது.

ink cartridge : மைப் பொதியுறை; : பெரும்பாலும் ஒரு மையச்சுப் பொறியில் (Ink-jet printer) பயன்படுத்தக் கூடிய மைக் குப்பி. பெரும்பாலும், மை தீர்ந்தவுடன் எறியப்படக் கூடியதாக இருக்கும்.

Ink character reader, magnetic : காந்த மையெழுத்துப் படிப்பி.

inline : உள்ளமை : 1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தருமதிப்புகளால் (arguments) பதிலீடு செய்யப்படுகின்றன. ஒரு நிரலின் செயல் திறனை மிகுவிக்க மொழிமாற்றத் தருணத்திலிலேயே உள்ளமை செயல்கூறுகள் பதிலீடு செய்யப்படு கின்றன. 2. ஹெச்டிஎம்எல் நிரலில் ஒரு வரைகலைப் படத்தை உரைப் பகுதியுடன் உள்ளமைத்து அதனைச் சுட்டுதல். இதற்கு (IMG) என்னும் குறிசொல் (Tag) பயன்படுகிறது.

inline function : உள்ளமை செயல்கூறு. சி++ மொழியில் உள்ளமை செயல் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

inline graphics : உள்ளமை வரை கலை : ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரை கலைக் கோப்புகள். ஹெச்டிஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடியும். தனியான கோப்புத்