பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

accounting package

22

active device


கணக்கியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட எந்திரம். தானியங்கு தகவல் செயலாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பழமையான கருவிகளுள் ஒன்று. தொடக்ககால கணக்கியல் எந்திரங்கள் மின்னணு அடிப்படையிலானவை அல்ல. துளையட்டை மற்றும் செருகு பலகைச் சட்டங்களைப் பயன்படுத்தின. 2. கணக்கியல் செயல்பாடுகளுக்கென்றே தனிச் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் கணினி. இக்கணினியை இயக்கியதும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள கணக்கியல் மென்பொருள் இயங்கத் தொடங்கும்.

accounting package : கணக்கிடு தொகுப்பு.

accounting routine : கணக்கிடு நடைமுறை.

ACIS : அசிஸ் : Andy, Charles, Ian's System என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது பொருள் நோக்கிலான வரைவியல் மாதிரிகளை உருவாக்கும் கருவித் தொகுதியாகும். முப்பரிமாணப் பயன்பாடுகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட வரைவியல் எந்திரம் (geometry engine).

accoustic coupler : கேட்பொலி பிணைப்பி.

accumulation : திரட்சி; சேர்ப்பு.

accumulator : திரளகம்; திரட்டகம்; சேர்ப்பகம் : நுண்செயலியில் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பதிவகம் (register). பொதுவாக, குறிப்பிட்ட உறுப்புகளை எண்ணுவதற்கோ, தொடர்கூட்டுத் தொகையை பதிவு செய்யவோ இப்பதிவகம் பயன்படுகிறது.

Acrobat : அக்ரோபேட் : அடோப் நிறுவனம் உருவாக்கியுள்ள ஒரு வணிக மென்பொருள். டாஸ் விண்டோஸ், மெக்கின்டோஷ், யூனிக்ஸ் பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட, முழுதும் வடிவமைக்கப்பட்ட ஆவணங்களை பிடிஎஃப் (PDF - Portable Document Format) கோப்பாக மாற்றித் தரும். பிடிஎஃப் கோப்பினை வெவ்வேறு பணித்தளங்களில் பார்வையிட முடியும். மூலக் கோப்பு எந்தப் பயன்பாட்டுத் தொகுப்பில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அக்கோப்பிலுள்ள வேறுவேறான எழுத்துருக்கள், நிறங்கள், வரைகலை மற்றும் ஒளிப்படங்களையும் சேர்த்து, கணினி வழியாக பிறருக்கு அனுப்பி வைக்க முடியும். பிடிஎஃப் கோப்புகளைப் பார்வையிடமட்டும் முடிகின்ற 'அக்ரோபேட் ரீடர்' என்னும் மென் பொருள் இலவசமாகவே கிடைக்கிறது.

acronym : முதலெழுத்துக் குறும்பெயர்; தலைப்பெழுத்துச் சுருக்கப்பெயர்.

across worksheets : பணித்தாள்களுக்கிடையே.

action : செயல்.

action argument : செயல் மதிப்புரு: செயல் இணைப்பு மாறி.

action diagram : செயல் வரிப்படம்.

action message : செயல் தகவல்; செயல் செய்தி.

action oriented management : செயல் சார்ந்த மேலாண்மை.

active device : இயங்கும் உறுப்பு; இயக்கும் பகுதி : இயங்கிக் கொண்டிருக்கும் சாதன நிரலின் அடிப்படையில், ஒரு கோப்பு அல்லது கணினித்திரையில் ஒரு பகுதி, தற்போது செயல் பாட்டில் இருக்கும் அல்லது கட்டளைச் செயல்பாடுகளுக்கு ஆட்பட்டிருக்கும். பொதுவாக, திரையில் தோன்றும் சுட்டுக்குறி (cursor)