பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intelligent device

239

interleaved memory


|

அடுத்த முனைக்குத் தகவல்களை அனுப்பும் பணியை மட்டுமின்றி, அது செருகப்பட்டுள்ள இணைப்பியின் பண்பியல்புகளை நிர்ணயம் செய்யும் திறனையும் உள்ளடக்கிய (கம்பி) வடம்.

intelligent device :நுண்ணறிவுச் சாதனம்; அறிவார்ந்த சாதனம்.

intelligent terminal intensity : அறிவார்ந்த முனையச் செறிவு.

intelligent transportation infrastructure :நுண்ணறிவு போக்குவரத்து அகக் கட்டமைப்பு : 1996ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டுப் போக்குவரத்துச் செயலர் (அமைச்சர்) ஃபெடரிக்கோ பானா அவர்கள் முன்வைத்த திட்டம். நகர்/புறநகர் நெடுஞ்சாலை மற்றும் திரளான போக்குவரத்துக் கட்டுப்பாடு/ மேலாண்மை சேவைகளை தானியங்கு மயமாக்கும் திட்டம் இது.

interactive fiction : ஊடாடு கதை: ஒருவகை கணினி விளையாட்டு. ஒரு பயனாளர் கணினிக்குச் சில கட்டளைகளைக் கொடுத்து, ஒரு கதையில் தானும் ஒரு கதை மாந்தராகப் பங்கு பெறலாம். பயனாளர் தரும் கட்டளைகள் ஒரளவுக்கு கதையின் நிகழ்வுகளை நிர்ணயிக்க முடியும். பெரும்பாலும் ஒர் இலக்கினை அடைவது கதையின் மையக் கருவாக இருக்கும். அந்த இலக்கை அடைவதற்கான சரியான நடவடிக்கைகளின் வரிசையைக் கண்டறிந்து செயல்படுவதே விளையாட்டின் புதிரான பகுதியாகும்.

interactive link :இடைப் பரிமாற்ற இணைப்பு: ஊடாட்டத் தொகுப்பு.

interactive television : ஊடாடு தொலைக்காட்சி : தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்வையாளர் ஊடாட வகைசெய்யும் ஒரு ஒளிக் காட்சித் தொழில்நுட்பம் (Video Technology). இணையத் தொடர்பு,நேயர் விருப்ப ஒளிக்காட்சி (Video on demand), ஒளிக்காட்சிக் கலந்துரையாடல்(Video Conference) போன்றவை ஊடாடு தொலைக் காட்சியின் சில பயன்பாடுகளாகும்.

interactive video disk : இடைப்பரிமாற்ற ஒளிக்காட்சி வட்டு: ஊடாடு ஒளிக் காட்சி வட்டு.

interapplication communication : பயன்பாடுகளுக்கிடையேயான தக வல்தொடர்பு : ஒரு நிரல் இன்னொரு நிரலுக்குச் செய்தி அனுப்பும் செயல்பாடு. (எ-டு) சில மின்னஞ்சல் நிரல்கள், பயனாளர் அஞ்சலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே அதில் குறிப்பிட்டுள்ள ஒர் இணையத் தளத்தைச் சொடுக்கிப் பார்வையிட அனுமதிக்கின்றன. பயனாளர் சொடுக்கியதும், இணைய உலாவி அக்குறிப்பிட்ட இணையத் தளத்தை தானாகவே பெற்றுத் தருகிறது.

Inter Block Gap (IBG) :தொகுதி இடைவெளி.

inter connected network : சேர்த்தினைப் பிணையம்.

inter connected ring: சேர்த்திணைப்பு வளையம்.

Inter link : தொடுப்புறவு; தொடுப்பிணைப்பு

inter process communication : பணியிடைத் தகவல் தொடர்பு.

inter record gap (IRG): ஏட்டிடைவெளி.

interleaved memory :இடைப்பின்னல் நினைவகம் : கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM)