பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Inernet security

244

Internet telephone


(AB) இணையம் தொடர்பான நீண்ட காலப் பரிந்துரைகளை முன் வைக்கும் தன்முனைப்பு அமைப்பு.

Internet security : இணையப் பாதுகாப்பு : இணையத் தகவல் பரிமாற்றத்தில் தகவல் சான்றுறுதி, அந்தரங்கம், நம்பகத்தன்மை, சரிபார்ப்பு இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கருத்துரு. (எ-டு)வைய விரிவலையில் (www) உலாவி (Browser) மூலமாக பற்று அட்டையைப் (Credit Card) பயன்படுத்தி ஒரு பொருளை வாங்குவதில் பல்வேறு பாதுகாப்புச் சிக்கல்கள் அடங்கியுள்ளன. முதலாவதாக இணையம் வழியாக அனுப்பப்படும் பற்று அட்டையின் எண்ணை அத்துமீறிகள் எவரும் குறுக்கிட்டு அறிந்து கொள்ளக் கூடாது. அவ் வெண் பதிந்துவைக்கப்பட்டுள்ள வழங்கன் கணினியிலிருந்து வேறெவரும் நகலெடுத்துவிடக் கூடாது. அந்த பற்று அட்டை எண்ணை அதற்குரிய நபர்தான் அனுப்பினாரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அதை அனுப் பியவர் பின்னாளில் தான் அனுப்பவில்லை என்று மறுதலிக்க வழிியிருக்கக் கூடாது.

Internet Service Provider (ISP) : இணையச் சேவை நிறுவனம் ; இணையச் சேவை வழங்குவோர்; இணையச் சேவை மையம்.

Internet society : இணைய சமூகம் : இணையக் கூட்டுறவுச் சங்கம் : இணையப் பயன்பாட்டை வளர்க்கின்ற, பராமரிக்கின்ற மற்றும் மேம் படுத்துகின்ற தனிநபர்கள், குழுமங்கள், அமைப்புகள், அரசு முகமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பு. இணையக்

244

Internet telephone

கட்டுமானக் கழகம் (ஐஏபி), இதன் ஒர் அங்கமாகும். தவிரவும், இணையச் சமூக அமைப்பு இணையச் சமூக செய்தி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஐநெட் (INET) மாநாடுகளை நடத்தி வருகிறது.

Internet Software Consortium : இணைய மென்பொருள் கூட்டமைப்பு : இணையம் தொடர்பான மென்பொருள்களை உருவாக்கி அவற்றை வைய விரிவலை மற்றும் எஃப்டீபீ மூலம் இலவசமாக உலகுக்கு வழங்கும் ஆதாய நோக் கில்லாத அமைப்பு. டிஹெச்சிபீ (DHCP - Dynamic Host Configuration Protocol) போன்ற இணையத் தர வரையறைகளை உருவாக்கியதிலும் இந்த அமைப்புக்குப் பங்கு உண்டு.

Internet talk radio : இணையப் பேச்சு வானொலி : வானொலியில் ஒலி பரப்பாகும் நிகழ்ச்சிகளைப் போன்று இணையத்தில் பதிவிறக்கம் செய் வதற்கு ஏற்ற வகையில் வெளியிடப் படுகின்ற ஒலிக்கோப்புகளிலான நிகழ்ச்சிநிரல். வாஷிங்டனிலுள்ள தேசிய தாளிகை மாளிகையில் இந்த நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை இருக்கும். 30 நிமிட நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் ஒலிக் கோப்புகள் 15 எம்பி வட்டு இடத்தை எடுத்துக் கொள்ளும்.

Internet time : இணைய நேரம்

Internet telephone : இணையத் தொலைபேசி :பொதுத் தொலை தொடர்புக் கட்டமைப்பைப் பயன் படுத்தாமல் இணையத்தின் வழியாக இரண்டுபேர் பேசிக் கொள்ளும் முறை. இரு முனையிலும் ஒரு கணினி, ஓர் இணக்கி (modem),