பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Internet television

245

interpret


இணையத் தொலைபேசி மென் பொருள் இருப்பின் இணையம் வழியாகத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தவும், பெறவும், பேசிக் கொள்ளவும் முடியும்.

Internet television : இணையத் தொலைக்காட்சி :இணையம் வழியாக அலைபரப்பாகும் தொலைக் காட்சியின் கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சி நிகழ்ச்சிகள்.

Internet tools : இணையக் கருவிகள்

Internet traffic : இணையப் போக்கு வரத்து.

Internet work : இணைப்பிணையம் : ஒன்றாக இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கணினிப் பிணையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு. பெரும்பாலும் இணையம் வழி அல்லது விரி பரப்புப் பிணையம் வழியாக, இரண்டு குறும்பரப்புப் பிணையங்களுக்கிடையேயான தகவல் தொடர்பைக் குறிக்கும்.

Internet worm : இணையப் புழு :நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத்தானே இனப் பெருக்கம் செய்துகொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை நிலைகுலையச் செய்தது. யூனிக்ஸ் இயக்க முறைமையிலிருந்த ஒரு குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த நச்சுநிரல் ஊடுருவித் தீங்கு விளைவித்தது. கார்நெல் (Cornell) பல் கலைக்கழகத்தில் பயின்ற மாணவர் ஒருவரின் குறும்புத்தனத்தில் உருவானதே இந்த இணையப் புழு நிரலாகும்.

InterNIC : இன்டர்நிக் : இணையப் பிணையத் தகவல் மையம் என்ற பொருள்படும் Inter Network Information Centre என்ற தொடரின் சுருக்கம். களப் பெயர்களையும் ஐபீ முகவரிகளையும் பதிவு செய்யும் பணியை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கிறது. இணையத்தைப் பற்றிய தகவலைப் பரப்பும் பணியையும் செய்கிறது. அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம். (National Science Foundation), எடீ&டீ, ஜெனரல் அட்டாமிக்ஸ் (General Atomics), நெட்வொர்க் சொல்யூஷன்ஸ் இன்க் ஆகிய நிறுவனங்கள் பங்கு கொண்ட கூட்டமைப்பாக இன்டர் நிக் 1993ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. இன்டர்நிக்கின் மின்னஞ்சல் (pseudi info@internic.net. : இணையத் தளம்: http://www.internic.net

interplanetory internet : கொள்களுக்கிடையிலான இணையம்.

interpolate : இடைமதிப்பீடு; இடைக் கணிப்பு : ஒரு வரிசையான மதிப்புகளில் தெரிந்த இரண்டு மதிப்புகளுக்கு இடைப்பட்டமதிப்பினைக்கணக்கிடல்.

interpret ஆணைமாற்று : 1. கணினிக்கான ஒரு கூற்றை அல்லது ஒர் ஆணையை பொறிமொழி வடிவில் மாற்றி அதனைச் செயல் படுத்துதல். 2. ஒரு கணினி மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை, ஒவ்வொரு கூற்றாக பொறி மொழியில் மொழி பெயர்த்து அதனை நிறை வேற்றுவது. ஒட்டு மொத்த நிரலையும் பொறி மொழிக்கு மாற்றம் செய்து, பிறகு தனியாக பொறி மொழி நிரலை இயக்கிக் கொள்ளும் மொழிமாற்று (Compile) முறைக்கு மாற்றானது.