பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

invalid media

247

IP

உள்ளீடு செய்யப்படுகின்ற ஏற்றுக் கொள்ளவியலாத மதிப்பு. (எ-டு) எண்வகை மதிப்புக்குப் பதிலாக எழுத்துவகை மதிப்பை உள்ளீடு செய்தல். 2. ஒரு நிரலில் தவறான தருக்க முறையில் எழுதப்பட்ட பிழையான கட்டளை. விடையும் பிழையானதாக இருக்கும்.

invalid media : முறையாண்மை ஊடகம்; பொருந்தா ஊடகம்.

inverted list : தலைகீழ் பட்டியல் : ஓர் அட்டவணையில் குறிப்பிட்ட தகவல் தொகுதியை கண்டறிய மாற்றுக் குறியெண்களை உருவாக்கும் ஒரு வழிமுறை. (எ-டு) கார்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பில் ஏடுகள் 3,7,19,24,32 ஆகியவை நிறம் என்ற புலத்தில் சிவப்பு என்னும் மதிப்பைக் கொண்டுள்ளன. நிறம் என்ற புலத்திற்கான தலைகீழ் பட்டியலில் (அல்லது வரிசைப்பட்டியல் -Index) ஒரு ஏடு சிவப்பு என்ற நிறப்பெயரையும் 3,7,19,24,32 என்கிற ஏட்டுக் குறி யெண்களையும் கொண்டிருக்கும்.

inverted - list database :தலைகீழ்ப் பட்டியல் தரவுத் தளம் : உறவுமுறைத் தரவுத் தளத்திற்கு (RDBMS) இணையான ஒரு தரவுத் தளம். ஆனால் பல வேறுபாடுகளைக் கொண்டது. தரவுத் தள மேலாண்மை சற்றே கடினமானது. ஒரு உறவுமுறைத் தரவுத் தளத்தைக் காட்டிலும் இதில் தகவல்களின் ஒத்திசைவு, ஒருங்கமைவு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவது கடினம். தலைகீழ்ப் பட்டியல் அட்டவணையில் இடை வரிசைகள் (அல்லது ஏடுகள்) ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் வரிசையாக்கங்களின் மூலம் எவ்வித வரிசை முறை ஆக்கப்பட்டிருப்பினும் இது மாறாது. இரு அட்டவணைகளுக்கிடையே சுமத்தப்படும் தருக்கமுறை இணைப்பு, நிபந்தனை அடிப்படையிலும் தரவுத் தளத்தை வரிசைப்படுத்தலாம். எந்தப் புலத்தையும் எத்தனை புலங்களையும் தேடு புலமாகக் கொள்ளலாம். தேடு புலம் தனித்தோ பல சேர்ந்தோ இருக்கலாம். போலிகை (Duplicate) ஏடுகள் இருக்கக் கூடாது, உறவுடைய இரு அட்டவணைகளுக்கு இடையேயான ஒருங்கிணைவு (integrity) கட்டாயம் என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. அட்டவணைகளோ, வரிசையாக்கக் கோப்புகளோ பயனாளருக்குப் புரியாது.

invert selection : ஏனையவற்றை தேர்வு செய்.

invoice : விலைப்பட்டி.

10. SxS : ஐஓ.சிஸ் : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொடக்க முறை வட்டுகளில் பதியப்பட்டுள்ள. மறைத்து வைக்கப்பட்டுள்ள இரு முறைமைக் கோப்புகளுள் ஒன்று. ஐபிஎம் வெளியிட்ட எம்எஸ்-டாஸ் பதிப்பில் இக்கோப்பு IBMBlO.COM என்றழைக்கப்பட்டது. கணினித் திரை, விசைப் பலகை, நெகிழ் வட்டகம், நிலை வட்டகம், நேரியல் துறை மற்றும் நிகழ்நேரக் கடிகாரம் போன்ற புறச்சாதனங்களுக்கான சாதன இயக்கிகளைக் கொண்டிருக்கும்.

lo exception : உ/வெ விதிவிலக்கு.

IP : ஐபீ : இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர், டீசிபி/ஐபி நெறிமுறையின்