பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

active addressing

23

ActiveX controls


அல்லது தேர்வு செய்யப் பட்ட ஒரு பகுதி, கணினித் திரையில் இயங்கும் உறுப்பினைக் காட்டும்.

active addressing : இயங்கு முகவரி; செயற்படு முகவரி.

active area : இயங்கு பரப்பு.

active channel : இயங்கு தடம்; செயற்படு அலைவரிசை.

active class : இயங்கு இனக்குழு.

active configuration : இயங்கு அமைவடிவு; செயல்படு தகவமைவு.

active content : இயங்கும் உள்ளடக்கம்; மாறும் உள்ளடக்கம் : நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் நடவடிக்கை காரணமாகவோ, தள வலைப்பக்கத்தின் மாறுகின்ற உள் ளடக்கம். இணையத்தில் திரையில் தோன்றும் ஒரு வலைப்பக்கத்தில் காணப்படும் படங்கள், எழுத்துகள், விளம்பரப் பட்டைகள் இவற்றை, நேரத்தின் அடிப்படையிலோ, பயனாளரின் தலையீட்டின் அடிப்படையிலோ (சுட்டியில் சொடுக்குவதன் மூலமோ) மாற்றியமைக்க முடியும். இத்தகைய மாறும் உள்ளடக்கம், ஆக்டிவ்எக்ஸ் கட்டுப்பாட்டு விசைகள் மூலம் இயல்கிறது.

active database : இயங்கு தகவல் தளம்; இயங்கு தரவுத் தளம்.

active decomposition : செயற்படு சிதைவு.

active decomposition diagram : இயங்கு சிதைவு வரைபடம்.

active element : செயற்படு உறுப்பு; இயங்கு பொருள்.

active index : செயற்படும் சுட்டு.

active links : இயங்கும் இணைப்புகள்; செயற்படு தொடுப்புகள்.

active matrix display : இயங்கு அணி காட்சி.

Active Movie : ஆக்டிவ் மூவி; இயங்கும் திரைப்படம்: மேசைக் கணினி மற்றும் இணையத்தில் செயல்படுத்தும் பல்லூடகப் பயன்பாடுகளுக்காக, மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய, பணித்தளம் சாரா இலக்கமுறை ஒளிக்காட்சி (Digital Video) தொழில் நுட்பம்.

active programme : நடப்பு நிரல்; இயங்கும் செயல் நிரல்: நுண் செயலி தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிரல்.

active sensing : நடப்பு ஆவணத் தொடர்.

active window : இயங்கு சாளரம்.

ActiveX : ஆக்டிவ்எக்ஸ் : வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயலுறுப்புகள் (components) ஒரு பிணையப் பணிச் சூழலில், தமக்குள் உறவாடிக் கொள்ள வகை செய்யும் தொழில் நுட்பங்களின் கூட்டுத் தொகுதி. 1990-களின் இடைப்பகுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதனை உருவாக்கியது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் காம் (COM.-Component Object Model) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வைய விரிவலையில் பயனாளர் உறவாடும் பக்கங்களை வடிவமைக்க ஆக்டிவ்எக்ஸ் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேசைக் கணினிப் பயன் பாடுகளிலும், ஏனைய நிரலாக்கங்களிலும்கூடப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ActiveX controls : ஆக்டிவ்எக்ஸ் கட்டுப்பாடுகள்; ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசைகள் : ஆக்டிவ்எக்ஸ் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மென்பொருள் செயலுறுப்புகள். அசைவூட்டம்