பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IT

251

i-way


தலைப்பெழுத்துக் குறும்பெயர். பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைவனங்களுக்கு இணைய இணைப்புச் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம். சில சேவையாளர்கள் ஒரு நகரில் அல்லது ஒரு வட்டாரப் பகுதியில் மட்டுமே இணையச் சேவை வழங்குவதுண்டு. இன்னும் சில சேவை நிறுவனங்கள் பல்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் சேவை வழங்குகின்றன.

ΙΤ: தகவல் தொழில்நுட்பம்: Information Technology என்பதன் குறுக்கம்.

.it : ஐடீ : ஒர் இணைய தளம் இத்தாலி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவு களப்பெயர்.

iteration: பன்முறை செய்தல்; திரும்பச் செய்தல்.

iterative statement : மடக்கு கூற்று; மடக்குக் கட்டளை : ஒரு நிரலில், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளைகளை மீண்டும் மீண்டும் நிறைவேற்றச் செய்யப் பயன் படுத்தப்படும் ஒரு கூற்று அல்லது கட்டளை அமைப்பு.

எடுத்துக்காட்டு :

பேசிக் மொழி : FOR =I To 10

     PRINT "Welcome" 

ΝΕΧΤ I

சி-மொழி : while (n>0) {

    printf("%d", n); 
    n - - ;

}

IT : ஐடிஐ : நுண்ணறிவு போக்குவரத்து அகக்கட்டமைப்பு என்று பொருள்படும் Intelligent Transportation Infrastructure என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

I-time : அ-நேரம் : அறிவுறுத்தல் நேரம் என்று பொருள்படும் Instruction Time என்பதன் சுருக்கம்.

ITR ஐடீஆர் : இணையப் பேச்சு வானொலி என்று பொருள்படும் Internet Talk Radio என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

ITU : ஐடியு : பன்னாட்டுத் தொலைத் தொடர்புச் சங்கம் என்று பொருள் பொருள்படும் International Telecommunication Union என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

ivue : ஐவ்யூ : ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு படிமக் கோப்பு வடிவாக்கம். ஒரு படத்தை எவ்வளவு பெரிதாக்கிப் பார்த்தாலும் திரையின் தெளிவு நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் கோப்பு வடிவம்.

i-way : ஐ-வழி; இட-வழி; த-சாலை: தகவல் நீள்நெடுஞ்சாலை (மீ நெடுஞ்சாலை).