பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.ke

257

keyboard terminal


K

.ke : .கேஇ : ஒர் இணைய தள முகவரி கென்யா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

kerberos or kerberos : கெர்பராஸ் : எஐடி நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லுபடியாக்க நெறி முறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரிபார்த்து அனுமதிக்கிறது. மறைக்குறியியல் முறையில் தகவல் தொடர்பை மறையாக்கம் செய்கிறது. இணையத்திலிருந்து (http://web.mit.edu/kerbeross/www) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பல்வேறு வகையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு மென்பொருள் தொகுப்புடனும் கிடைக்கிறது.

kern : நெருக்கம் : குறிப்பிட்ட இரண்டு எழுத்துக் குறிகளுக்கு இடையேயுள்ள இடைவெளியை மாற்றியமைத்தல். இதனால் நெருடலின்றிப் படிக்க முடிகிறது. அச்சுக் கோப்பில் எழுத்தமைவில் சமனாக்கம் இயலுகிறது. (எ-டு): கɿ என்ற இரு எழுத்துக் குறிகளுக்கு இடையேயான இடைவெளி குறைக்கப்படும் போது கி எனத் தோற்றமளிக்கும்.

keyboard buffer : விசைப்பலகை இடையகம் : கணினி நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதி. விசைப்பலகையில் மிக அண்மையில் உள்ளீடு செய்த எழுத்துகளைச் சேமித்து வைக்கும் இடம். செயல் முறைப்படுத்தப்படுவதற்கு முன் பாக உள்ளிட்டுத் தகவல் இந்த நினைவகத்தில் தங்கியிருக்கும். செயலி மற்றும் புறநிலைச் சாதனங்களுக்கு இடையே நிலவும் செயல்பாட்டு வேக வேறுபாடு காரணமாக இது போன்ற இடைநிலை நினைவகத்தில் உள்ளிட்டு/வெளியீட்டுத் தகவல்களை சேமிக்க வேண்டியுள்ளது.

keyboard enhancer : விசைப்பலகை மேம்படுத்தி : விசைப்பலகையில் அழுத்தும் விசைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிரல். அழுத்தும் விசையின் அல்லது விசைகளின் விளைவை மாற்றியமைக்க இந்த நிரலால் முடியும். ஒரு விசையை அழுத்தியவுடன் ஒரு நிரல்கூறினை இயங்க வைக்கமுடியும்.

keyboard layout : விசைப்பலகை உருவரை : ஒரு குறிப்பிட்ட விசைப்பலகையில் அமைந்துள்ள விசைகளின் அமைப்பு முறை. விசைகளின் எண்ணிக்கை (தற்போதைய தர வரையறை 101) மற்றும் விசைகளின் வரிசையமைப்பு (அமெரிக்க முறை - குவெர்ட்டி (QWERTY) ஆகியவற்றையும் உள்ளடக்கியது. சில நிறுவனங்கள் தம் சொந்த விசைப்பலகை உருவரைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. விசைக்கும் அதனோடு தொடர்புடைய எழுத்துக்கும் இடையேயான உறவினை பயனாளர் தம் விருப்பப்படி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

keyboard punch : விசைப்பலகை துளை.

keyboard terminal : விசைப்பலகை முனையம்.

17