பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ActiveX documents

24

add/remove programmes


(animation), மீள்-எழு பட்டிகள் (pop-up menus) போன்ற தனிச்சிறப்பான செயல்பாடுகளை வலைப் பக்கங்களிலும் மேசைப் பயன்பாடுகளிலும் உருவாக்குவதற்கு இச்செயலுறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சி, சி++, விசுவல் பேசிக், விசுவல் சி++ போன்ற மொழிகளில் ஆக்டிவ் எக்ஸ் செயலுறுப்புகளை உருவாக்க முடியும்.

ActiveX documents : ஆக்டிவ் எக்ஸ் ஆவணங்கள்.

activity rate : செயற்பாட்டு வீதம்.

Actor : ஆக்டர் : ஒயிட்வாட்டர் குரூப் நிறுவனத்தினர் உருவாக்கிய, பொருள் நோக்கிலான நிரலாக்கமொழி. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் நிரலாக்கத்திற்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட மொழி.

A-D Analog to Digital : தொடர்முறை இலக்கமுறை மாற்றி.

adapter : ஏற்பி, இயைபி; தகவி.

adapter class : ஏற்பி இனக்குழு.

adapative : இயைபு.

adaptive allocation : இயைபு ஒதுக்கீடு.

adaptive answering : பிரித்தறி மறுமொழி, இயைபறி பதிலுரை: தொலை பேசிவழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப பதிலிறுக்கும் ஒரு இணக்கியின் (modem) திறனைக் குறிக்கும்.

adaptive differential pulse code modulation : தகவேற்பு வேறுபாட்டுத் துடிப்புக் குறியீட்டுப் பண்பேற்றம் : இலக்கமுறை கேட்பொலித் தகவலை இறுக்கிச் சேமிப்பதற்குப் பயன்படும் தருக்கமுறை. கேட்பொலியின் ஒவ்வொரு துணுக்கையும் அப்படியே இலக்கமுறையில் சேமிக்காமல், ஒவ்வொரு துணுக்கும் அதன் முந்தைய துணுக்கிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை மட்டும் பதிவு செய்யும் முறை.

adaptive interface : இயைபு இடைமுகம்.

add data table : தரவு அட்டவணை சேர்.

add data : தரவு சேர்.

add echo : எதிரொலி சேர்.

add separater : பிரிப்பி சேர்.

add/subtract time : நேரம் கூட்டு/கழி

add to favourites : கவர்வுகளில் சேர்.

add trend line : போக்கு வரி சேர்.

addendum : சேர்ப்பு; பின்னிணைப்பு.

adder, binary half : இரும அரைக் கூட்டி.

adder, half : அரைக் கூட்டி.

adding machine : கூட்டல் எந்திரம்.

add-in manager : கூடுதல் மேலாளர்.

add-in programme : சேர்ப்பு செய் நிரல்; கூடுதல் நிரல்.

addition table : கூட்டல் அட்டவணை.

add method : கூட்டு வழிமுறை.

add new hardware : புதிய வன்பொருள் சேர்.

add-on : கூட்டுறுப்பு.

add - on card : திறனேற்றி அட்டை; கூடுதல் அட்டை; கூட்டுறுப்பு அட்டை

add record : ஏடு சேர்.

add/remove programmes : நிரல்கள் சேர்/அகற்று.